ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் வெட்டி சுற்றுச்சூழல் கூட்டமைப்பினர் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், மண் அரிப்பை தடுக்கவும் அமைக்கப்பட்ட வெட்டிவேரானது தற்போது அதையே தொழிலாக ஏக்கர் கணக்கில் நர்சரியாக அமைத்து, வேரில் இருந்து எண்ணெய் பிரித்தெடுத்து விவசாயம் செய்து வருகின்றனர். வெட்டிவேர் என்பது சுற்றுச்சூழலை பாதுகாக்கும் அற்புதமான தாவரம் ஆகும். இதற்கு குருவேர் என்ற மற்றொரு பெயரும் உண்டு. தாவர வகையில் புல் வகையை சார்ந்தது ஆகும். இதன் பிறப்பிடம் தமிழகத்தில் தான் தோன்றியது என்று கூறுகின்றனர். கடல் மண் தான் இதற்கு ஏற்ற மண் என்பதால் ராமேஸ்வரம், பேய்கரும்பு, உச்சிப்புளி ஆகிய பகுதிகளில் வெட்டிவேர் விவசாயம் மேற்கொள்ள தொடங்கிவிட்டனர்.
ராமேஸ்வரத்தை சேர்ந்த ஸ்ரீராம் என்பவர் பேய்கரும்பு பகுதியில் 2 ஏக்கரில் அளவில் வெட்டிவேர் நாற்று நட்டு தற்போது அறுவடை செய்ய தொடங்கிவிட்டார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடப்பட்ட நாற்றானது தற்போது அறுவடை செய்ய தொடங்கி விட்டனர். இந்த வெட்டிவேரில் 5 ரகம் உள்ளது, இதில் தரனி என்ற ரகம் பயிரிடப்பட்டுள்ளது. அறுவடை என்பது நடப்பட்ட நாளில் 8 மாதத்தில் இருந்து 18 மாதம் வரை அறுவடை செய்யப்படுகிறது, வெயில் காலம் அதாவது ஏப்ரல், மே, மாதங்களில் செய்தால் மிகவும் நல்லதாகுமாம்.
வெட்டிவேர் மண் அரிப்பை தடுக்கும் என்பதால் வேருடன் சேர்த்து மண்ணை கெட்டியாக பிடித்துக்கொள்ளும். அதனால் அறுவடைக்கு முன்பு 20 நாட்கள் தண்ணீர் விடாமல் வெயில் நேரத்தில் அறுவடை செய்கின்றனர். வெட்டிவேரானது வறட்சியை தாங்கும் பயிர் என்பதால் பராமரிப்பு மிகவும் எளியதாகும். இதன் வேரிலிருந்து எண்ணெய் எடுத்து வாசனை திரவியங்கள், தைலங்கள் பிரித்தெடுக்கப்படுகிறது. செடியில் இருந்து கைவினைப் பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. கைவினைப் பொருட்கள் மூலம் பெண்களுக்கு வேலை வெட்டிவேர் சுற்றுச்சூழல் கூட்டமைப்பின் மூலம் ஏற்படுத்தப்படுகிறது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
ஒரு நாற்றானது 80 பைசாவிற்கு வாங்கி ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை பயிர்கள் நடப்படுகிறது. இதன் மூலம் கிடைக்கும் வேர்களின் வாசனையை பொருத்து விற்கப்படுகிறது. வருடத்திற்கு ஒரு ஏக்கருக்கு ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை வருமானம் கிடைக்க கூடும் எனவும் விவசாயி ஸ்ரீராம் கூறுகிறார். தற்போது இவரை பார்த்து ராமநாதபுரம் மாவட்டத்தில் சிலர் பராமரிப்பு குறைவாகவும், லாபம் அதிகம் என்பதால் ஒரு ஏக்கரில் இருந்து 5 ஏக்கர் வரை விவசாயம் செய்ய தொடங்கி உள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Agriculture, Local News, Ramanathapuram