முகப்பு /ராமநாதபுரம் /

கீழப்பருத்தியூருக்கு பேருந்து சேவை.. மலர் தூவி வரவேற்ற கிராம மக்கள்..

கீழப்பருத்தியூருக்கு பேருந்து சேவை.. மலர் தூவி வரவேற்ற கிராம மக்கள்..

X
கீழப்பருத்தியூருக்கு

கீழப்பருத்தியூருக்கு பேருந்து சேவை மலர் தூவி வரவேற்ற கிராம மக்கள்

Bus Facility In Keezhaparuthiyur Villeage : பரமக்குடி அருகே உள்ள கீழப்பருத்தியூர் கிராம மக்கள் மக்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்த பரமக்குடியிலிருந்து புதிய வழித்தடத்தில் கீழப்பருத்தியூருக்கு பேருந்து சேவை மலர்தூவி வரவேற்ற கிராம மக்கள்.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Ramanathapuram, India

பரமக்குடி அருகே உள்ள கீழப்பருத்தியூர் கிராம மக்கள் மக்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்த பரமக்குடியிலிருந்து புதிய வழித்தடத்தில் கீழப்பருத்தியூருக்கு பேருந்து சேவை மலர்தூவி வரவேற்ற கிராம மக்கள்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியானது மாவட்டத்தின் மையப்பகுதியில் இருப்பதால் கல்வி, தொழில் என தினந்தோறும் ஜந்தாயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுவட்டார கிராம மக்கள் பரமக்குடி சேர்ந்து நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், பரமக்குடி அருகே உள்ள கீழப்பருத்தியூர் கிராமத்திற்கு பரமக்குடிக்கும் பேருந்து சேவை இல்லாததால் கிராம மக்கள் ஒன்றிணைந்து பேருந்து வசதி இயக்கப்பட வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்து தமிழக அரசிற்கு நீண்ட நாட்களாகக் கோரிக்கை வைத்து வந்தனர்.

கீழப்பருத்தியூருக்கு பேருந்து சேவை

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்நிலையில், கீழப்பருத்தியூர் கிராமத்திலிருந்து பீரக்குறிஞ்சி கிராமம் வழியாக பரமக்குடி பேருந்து நிலையத்திற்குப் பேருந்து வசதியானது தொடங்கப்பட்டு தினசரி நான்கு முறை பேருந்தானது இவ்வழியாக இயக்கப்பட உள்ளது. இதையடுத்து, கீழப்பருத்தியூர் கிராம மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்த பேருந்து வசதியானது தொடங்கப்பட்டதால் கிராம மக்கள் பேருந்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி உற்சாகத்துடன் பேருந்தில் ஏறி பயணம் செய்தனர்.

top videos
    First published:

    Tags: Local News, Ramanathapuram