ஹோம் /ராமநாதபுரம் /

ராமநாதபுரத்தில் மழையால் நிலைதடுமாறி கவிழ்ந்த பேருந்து..

ராமநாதபுரத்தில் மழையால் நிலைதடுமாறி கவிழ்ந்த பேருந்து..

X
விபத்துக்குள்ளான

விபத்துக்குள்ளான பேருந்து

Ramanathapuram District News : திருப்பூரில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி வந்த அரசு பேருந்து பாம்பன் பாலம் அடுத்த மண்டபம் பூங்கா அருகே நிலை தடுமாறி விபத்து, அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

இந்தியா முழுவதிலுமிருந்து தினந்தோறும் ராமேஸ்வரத்திற்கு சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர். ராமேஸ்வரத்திலுள்ள ராமநாதசுவாமி திருக்கோவில் இந்தியா முழுவதும் பிரபலமாகும். அதனால், சுற்றுலாப் பயணிகள் நிறைந்த பகுதியாக ராமேஸ்வரம் உள்ளது.

இந்நிலையில், திருப்பூரிலிருந்து வந்த அரசு பேருந்தும், மதுரையில் இருந்து வந்து அரசு பேருந்தும் ராமேஸ்வரம் நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது, இரண்டு அரசு பேருந்துகள் பாலத்தை அடுத்த மண்டபம் பூங்கா அருகே ஒன்றோடு ஒன்று முந்தி செல்லும்போது சாலையின் எதிரே இருசக்கர வாகனம் வந்ததால் அரசு பேருந்து ஓட்டுநர் வண்டியை நிறுத்த முற்பட்டுள்ளார்‌.

அப்போது, மழை பெய்த காரணத்தால் பிரேக் பிடிக்காமல் சாலையில் வண்டி நிக்காமல் நிலை தடுமாறி மண்டபம் அருகே உள்ள பூங்காவிற்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது. பேருந்தில் 15 பயணிகள் மட்டும் பயணம் செய்துள்ளனர்.

இதையும் படிங்க : இடிந்து விழுந்த பள்ளி மேற்கூரை.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மாணவர்கள்.. ராமநாதபுரத்தில் அதிர்ச்சி!

இந்த விபத்தில் எந்தவொரு உயிர்சேதமும் இன்றி அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர். மேலும் சிறு காயங்களுடன் பயணிகள் மீட்கப்பட்டு மற்றொரு அரசு பேருந்து வரவழைக்கப்பட்டு அதன் மூலம் ராமேஸ்வரம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மண்டபம் காவல்துறையினர் விபத்து குறித்து அரசு பேருந்து ஓட்டுநர்களிடம் விசாரணை செய்து நடத்தினர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

தொடர்ந்து மழை நேரத்தில் பாம்பன் பாலத்தில் விபத்துகள் நடைபெறுவதால் பாம்பன் பாலத்தில் செல்லும் வாகனங்கள் சீரான வேகத்தில் செல்ல வாகன ஓட்டிகளுக்கு காவல்துறையினர் அறிவுரை வழங்கியுள்ளனர்.

First published:

Tags: Local News, Ramanathapuram