முகப்பு /ராமநாதபுரம் /

பம்மனேந்தல் கிராமத்தில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம்

பம்மனேந்தல் கிராமத்தில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம்

X
சித்திரை

சித்திரை திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம்

Double Bullock Race In Pammanendal Village | கமுதி அருகே பம்மனேந்தல் கிராமத்தில் உள்ள குருநாதசுவாமி ஆலயத்தின் 47ம் ஆண்டு சித்திரை திருவிழாவினை முன்னிட்டு இரட்டை மாட்டுவண்டி பந்தயமானது சீறிப்பாய்ந்த காளைகளுடன் சிறப்பாக நடைபெற்றது.

  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பம்மனேந்தல் கிராமத்தின் குருநாதசுவாமி ஆலயத்தின் 47-ம் ஆண்டு சித்திரை திருவிழாவானது கடந்த 5-ம் தேதி காப்பு கட்டப்பட்டது, கொடியேற்றத்துடன் தொடங்கியது.

சித்திரை திருவிழா தொடங்கியதிலிருந்து நாள்தோறும் மூலவருக்கும், பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகங்களும் சிறப்பு ஆராதனைகளும் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்வான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்த பால்குடம் எடுத்து, காவடிகள் எடுத்து, சேத்தாண்டி வேடம் அணிந்தும், வெகு விமர்சையாக திருவிழாவானது நடைபெற்றது.

இந்நிலையில், சித்திரை திருவிழாவினை முன்னிட்டு பம்மனேந்தல் கிராமத்தின் சார்பில் இரட்டை மாட்டு வண்டி பந்தயமானது சிறிய மாடுகள், பெரிய மாடுகள் என பிரிவுகளில் 12 கிலோ மீட்டர் இலக்காக கொண்டு போட்டியானது நடைபெற்றது. இந்த இரட்டை மாட்டுவண்டி போட்டியில், ராமநாதபுரம், விருதுநகர், தேனி, மதுரை, சிவகங்கை, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களிலிருந்து மாட்டுவண்டி வீரர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த போட்டியில் கலந்து கொண்டு முதல் 3 இடங்களை பிடித்த மாட்டு வண்டி பந்தய வீரர்களுக்குரொக்கப்பணமும், பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் முதல் பரிசு கமுதியைச் சேர்ந்த சுந்தரபாண்டியும், 2ம் பரிசை சிவகங்கையைச் சேர்ந்த முத்துவும், 3ம் பரிசு கமுதியை சேர்ந்த காளிமுத்தன் ஆகியோர் பரிசுகளை வாங்கி சென்றார்.

top videos
    First published:

    Tags: Local News, Ramanathapuram