Home /ramanathapuram /

இந்தியாவை முதலிடத்துக்கு கொண்டு வருவது இளைஞர்கள் கையில் தான் உள்ளது - இஸ்ரோ சிவன்!

இந்தியாவை முதலிடத்துக்கு கொண்டு வருவது இளைஞர்கள் கையில் தான் உள்ளது - இஸ்ரோ சிவன்!

இந்தியாவை

இந்தியாவை உலகத்தில் முதலாவதாக கொண்டு வருவது– இளைஞர்கள் கையில்

இஸ்ரோ மற்றும் நாசா இணைந்து உருவாக்கி கொண்டிருக்கின்ற நைஸா என்ற செயற்கைக்கோள் இந்தியாவிலிருந்து ஏவப்பட உள்ளது.

    ராமேஸ்வரத்தில் உள்ள மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் வீட்டிற்கு இஸ்ரோ முன்னாள் தலைவர் டாக்டர்.சிவன் வருகை தந்து முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் அவர்களின் உறவினர்களை சந்தித்து நலம் விசாரித்தார்.

    இதன் பின்னர் மறைந்த அப்துல் கலாம் இல்லத்தில் பள்ளி மாணவ, மாணவிகளின் பல்வேறு அறிவியல் சம்பந்தமான கேள்விகளுக்கு பதிலளித்து கலந்துரையாடினார்.

    இதையடுத்து, செய்தியாளர் சந்தித்த டாக்டர் சிவன், இந்தியாவை உலகத்தில் முதலிடத்தில் கொண்டு வருவது இளைஞர்கள் கையில் தான் உள்ளது என்றும் அதனால் தான் நான் செல்லுமிடமெல்லாம் கிராமப்புற மாணவர்களை அதிக அளவில் தொடர்பு வைத்து வருவதாகவும் தெரிவித்தார்.

    இஸ்ரோ மற்றும் நாசா இணைந்து உருவாக்கி கொண்டிருக்கின்ற நைஸா என்ற செயற்கைக்கோள் இந்தியாவிலிருந்து ஏவப்பட உள்ளது. இந்த செயற்கை கோளால் பூமியில் நிலவக்கூடிய காலநிலை மாற்றங்களான இயற்கை சீற்றங்கள், வெப்ப நிலை, பருவமழை, புயல், சுனாமி, பனிக்கட்டி சறுக்கு போன்றவற்றை முன்கூட்டியே அறிய முடியும். இது இந்தியாவிலிருந்து ஏவப்பட்டுவதால், உலகநாடுகளுக்கு பயனளிக்கும் நாடாக இந்திய இருக்கும் என்று தெரிவித்தார்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரப்பட்டினத்தில் விண்வெளி ஏவுதளம் அமைய உள்ளதற்கு, 2200 ஏக்கர் நிலம் தேவைப்படுவதாகவும். இஸ்ரோ தமிழக அரசிடம் கேட்கப்பட்டதை அடுத்து முதல்கட்டமாக 1750 ஏக்கர் இடம் வழங்கப்பட்டுள்ளதாகவும் முழுமையான இடங்கள் கையகப்படுத்திய பின்னர் கட்டுமான பணிகள் தொடங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.


    செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: ISRO

    அடுத்த செய்தி