ஹோம் /ராமநாதபுரம் /

ராமநாதபுரத்தில் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்ட பெண்கள்.. மதுப்பிரியர்கள் தலைத்தெறிக்க ஓட்டம்..

ராமநாதபுரத்தில் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்ட பெண்கள்.. மதுப்பிரியர்கள் தலைத்தெறிக்க ஓட்டம்..

டாஸ்மாக்கை முற்றுகையிட்ட பொதுமக்கள்

டாஸ்மாக்கை முற்றுகையிட்ட பொதுமக்கள்

Ramanathapuram District News : பாம்பனில் செயல்படும் மதுக்கடைகளை அகற்றக்கோரி பொதுமக்கள், மண்டபம் கிழக்கு ஒன்றிய மகளிர் பாசறை, நாம் தமிழர் கட்சியினர் இணைந்து மதுக்கடை முற்றுகை போராட்டம் நடத்தினர், மதுக்கடையை உடைக்கை முயன்றதால் காவல் துறையினர் அவர்களை கைது செய்தனர்.

மேலும் படிக்கவும் ...
  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் புண்ணிய ஸ்தலம் என்பதால் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ராமேஸ்வரம் பகுதியில் இருந்த அனைத்து மதுபானக்கடைகள் அனைத்தும் தமிழக அரசின் உத்தரவால் கடந்த 2017-ம் ஆண்டு மூடப்பட்டது.

இந்நிலையில், பாம்பன் பகுதியில் மட்டும் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து அரை கிலோ மீட்டர் தொலைவில் பாம்பன் ரயில் நிலையம் அருகில் மூன்று மதுபான கடைகள் திறக்கப்பட்டது.

இதில் பாம்பனில் உள்ள மூன்று மதுபான கடைக்கு ராமேஸ்வரம், தங்கச்சிமடம் பகுதியில் அதிகளவில் மது பிரியர்கள் வந்து மதுபானங்களை வாங்கி செல்கின்றனர்.

இதனால் பாம்பன் பஜார் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் ஏற்படுகிறது. மேலும் 15 கிலோ மீட்டர் தூரத்தில் ராமேஸ்வரத்தில் இருந்து மதுபிரியர்கள் வந்து இங்கேயே மது அருந்தி செல்வதால் ஏராளமான விபத்துகள் நடந்து பல உயிர்களும் பறிபோனது.

இதையும் படிங்க : ராமநாதபுரத்தில் காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு... வீணாக கடலில் கலக்கும் தண்ணீர்.. 

மேலும், குடித்துவிட்டு பேருந்துகளிலும் பயணம் செய்வதால் வேலைக்கு சென்று வரும் பெண்கள், பள்ளிகளுக்கு சென்று வரும் மாணவ, மாணவிகள் மிகுந்த சிரமம் அடைகின்றனர்.

ராமேஸ்வரம் பகுதியில் மதுக்கடைகள் இல்லாததை காரணம் வைத்து சிலர் மதுக்கடைகளில் இருந்து மதுபானங்களை மொத்தமாக வாங்கி வந்து கள்ள மதுவாக ராமேஸ்வரம் தீவு பகுதியில் முழுவதும் விற்பனை செய்து வருகின்றனர்.

இதையடுத்து, பாம்பன் பகுதியில் உள்ள மதுக்கடைகளையும் நிரந்தரமாக மூடக்கோரி, பாம்பன் பகுதி பொதுமக்கள், பெண்கள், மண்டபம் கிழக்கு ஒன்றிய பெண்கள் பாசறை மற்றும் நாம் தமிழர் கட்சியினர் இணைந்து மதுக்கடை முற்றுகையிட்டு கடைகளில் தடுப்புகளையும் உடைக்க முற்பட்டனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதனைத்தொடர்ந்து, மதுக்கடைகள் மூடப்பட்டது. முற்றுகையிட்டவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி அவர்கள் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் மது வாங்கிக்கொண்டும், அருந்திக்கொண்டிருந்த மது பிரியர்கள் பதற்றமடைந்து தலைதெறிக்க ஓடினர்.

First published:

Tags: Local News, Ramanathapuram