ராமேஸ்வரம் சங்குமால் கடற்கரையில் கடலில் நின்று கொண்டிருந்த நாட்டுப்படகு தீப்பிடித்து எரிந்து சேதம், கவலையில் மீனவரின் குடும்பம் இழப்பீடு வழங்க வலியுறுத்தல்
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே சங்குமால் பகுதியை சேர்ந்த பாபு என்பவர் நாட்டுப் படகு மூலம் மீன்பிடி தொழிலை செய்து வருகின்றார்.
இந்நிலையில், நேற்று காலையில் வழக்கம்போல் மீன்பிடிக்க கடலுக்குச் சென்று இரவு சங்கு மால் கடற்கரையோரம் நாட்டுப்படகை நங்கூரமிட்டு நிறுத்திவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதையடுத்து, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நாட்டுப்படகில் திடீரென மர்மமான முறையில் நாட்டுப்படகு தீப்பிடித்து எரிந்ததை அடுத்து அக்கம் பக்கத்தில் இருந்த மீனவர்கள் தீயை அணைத்து உள்ளனர்.
பின்னர் இதுகுறித்து காவல்துறையினர் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து அதிகாரிகள் நாட்டுப்படகு எப்படி தீப்பிடித்து எரிந்தது அல்லது வேறு யாரேனும் தீ வைத்து விட்டார்களா என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், விசைபடகில் பாதிபகுதி சேதமாகியுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மீனவரின் குடும்பத்தினர் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(Ramanathapuram)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.