ஹோம் /ராமநாதபுரம் /

ராமநாதபுரம் : வைகை ஆற்றில் மணல் கொள்ளை.. தடுக்க கோரி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பா.ஜ.கவினர்

ராமநாதபுரம் : வைகை ஆற்றில் மணல் கொள்ளை.. தடுக்க கோரி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பா.ஜ.கவினர்

X
ராமநாதபுரம்

ராமநாதபுரம்

Ramanathapuram District News : பரமக்குடியில் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் இடத்தில் மணல் திருடிய குற்றவாளிகளை கைதுசெய்ய கோரி பாஜகவினர் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் இடத்தில் மணல் திருடிய குற்றவாளிகளை கைது செய்ய கோரி பாஜகவினர் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தர்ராஜ் பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழாவை முன்னிட்டு கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழா நடைபெறும். மதுரைக்கு அடுத்தபடியாக பரமக்குடியில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமர்சியாக நடைபெற்று வருகிறது. பெருமாள் கோவிலுக்கு எதிரே உள்ள வைகை ஆற்றில் இறங்கி கள்ளழகர் காட்சி அளிப்பார்.

பரமக்குடி வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் இடத்தில் இரு தினங்களுக்கு முன்பு ஜே.சி.பி மூலம் லாரிகளில் மணல் அள்ளப்பட்டு திருடப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் மிகப்பெரிய பள்ளம் உருவாகி உள்ளது.

இதையும் படிங்க : இடிந்து விழுந்த பள்ளி மேற்கூரை.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மாணவர்கள்.. ராமநாதபுரத்தில் அதிர்ச்சி!

இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள், காவல்துறையினர் உடந்தையாக இருப்பதாக கூறி பாஜகவினர் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த முற்றுகைப் போராட்டத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் ஓட்டப்பாலத்தில் இருந்து வட்டாரச்சியர் அலுவலகம் வரை கோசமிட்டு ஊர்வலமாக வந்தனர்.

தொடர்ந்து வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு குற்றவாளிகளை கைது செய்ய கோரி கண்டன கோசங்களை எழுப்பினர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

பரமக்குடி சுற்று வட்டார கிராமப்புறங்களில் நடைபெற்று வந்த மணல் திருட்டு சம்பவங்கள் தற்போது, நகர்புறங்களிலும் தொடங்கிவிட்டது என பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.

First published:

Tags: Local News, Ramnad