ஹோம் /ராமநாதபுரம் /

பைக்கில் செல்பவரா நீங்க?... அப்படீனா இதை கட்டாயம் படிங்க - ராமநாதபுரம் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

பைக்கில் செல்பவரா நீங்க?... அப்படீனா இதை கட்டாயம் படிங்க - ராமநாதபுரம் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

பைக் பயணம்

பைக் பயணம்

இருசக்கர வாகன விபத்துகளின் மூலம் ஏற்பட்ட 126 மனித உயிரிழப்புகளில் 99 சதவீதம் மனித உயிரிழப்புகள் தலைக் கவசம் அணியாததால் ஏற்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Ramanathapuram, India

  இரு சக்கர வாகன விபத்தை தடுக்கும் நோக்கில், ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

  ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஜனவரி 2022 முதல் செப்டம்பர் 2022 வரையிலான காலத்தில் 262 வாகன விபத்துகள் ஏற்பட்டு அதன் மூலம் 281 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. இதில் 123 விபத்துகள் இருசக்கர வாகனங்களால் ஏற்பட்டு 126 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.

  தற்போது தலைக்கவசம் அணியாமல் வரும் பொது மக்களிடம் ஆன்லைன் மூலம் அபராதம் விதிக்கப்படுவதுடன், ஓட்டுனர் உரிமம் ரத்து செய்வது குறித்தும், குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளுதல் குறித்தும், பெட்ரோல் பங்கில் தலைக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு பெட்ரோல் வழங்காமல் இருப்பது குறித்தும் நடவடிக்கைகள் எடுக்கலாம் என்பது குறித்து சாலை பாதுகாப்பு கூட்டத்தில் ஆலோசனை வழங்கப்பட்டது.

  உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

  மேலும் இருசக்கர வாகன விபத்தில் பின்னால் அமர்ந்திருக்கும் பெண்களே அதிக அளவில் இறப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இருசக்கர வாகன விபத்துகளின் மூலம் ஏற்பட்ட 126 மனித உயிரிழப்புகளில் 99 சதவீதம் மனித உயிரிழப்புகள் தலைக் கவசம் அணியாததால் ஏற்பட்டுள்ளது.

  Must Read :த்ரில் அனுபவம்... சில்லென்று கொட்டும் அருவி - குளித்து மகிழ கோவை குற்றாலம் வாங்க!

  எனவே, மோட்டார் வாகன சட்டப்படி இருசக்கர வாகனத்தினை இயக்குபவரும், உடன் பயணிப்பவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்றும், 2 நபர்களுக்கு மேல் இருசக்கர வாகனத்தில் பயணிக்கக்கூடாது. நகர எல்லைக்குள் இரு சக்கர வாகனத்தினை இயக்கும் போது 40 கி.மீ., வேகத்திற்கு மிகாமல் மித வேகத்தில் பாதுகாப்பாக வாகனத்தை இயக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Published by:Ramprasath H
  First published:

  Tags: Accident, Local News, Ramanathapuram, Tamil News