ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மற்றும் பழமை வாய்ந்த பத்திரகாளியம்மன் கோயில் 39- வது பூச்செரிதல் விழா நடைபெற்றது, இதில் நூற்றுகணக்கான பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலின் உபகோயிலான பழமை வாய்ந்த மற்றும் புகழ் பெற்ற பத்திரகாளியம்மன் கோயிலில் ஏராளமான பக்தர்கள் பால்குடம் தூக்கி, காவடி எடுத்து, அக்னி சட்டி ஏந்தி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
பத்திரகாளியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழாவையொட்டி, கடந்த வாரம் ராமநாதபுரம் மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர்.
இந்நிலையில், 500க்கு மேலான பெண்கள் பக்தர்கள் கோயிலில் இருந்து பால்குடம் தூக்கியும், 100-க்கும் மேற்பட்டவர்கள் அக்னி சட்டி ஏந்தியும்10 க்கு மேலான பக்தர்கள் அலகு குத்தி ராமநாதசுவாமி கோயில் நான்கு ரதவீதியில் ஊர்வலம் வந்தனர்.
இதில் ராமேஸ்வரம் பகுதியை சுற்றி உள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பின்பு கோயில் நிர்வாகம் சார்பில் அன்னதான பிரசாதம் வழங்கப்பட்டது.
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(ராமநாதபுரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.