ஹோம் /ராமநாதபுரம் /

ராமநாதபுரத்தில் தேவர் குருபூஜையை முன்னிட்டு 3 நாள் டாஸ்மாக் கடை மூடல்

ராமநாதபுரத்தில் தேவர் குருபூஜையை முன்னிட்டு 3 நாள் டாஸ்மாக் கடை மூடல்

டாஸ்மாக்

டாஸ்மாக்

Tasmac closure | ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் நடக்கும் தேவர் குருபூஜையை முன்னிட்டு  நாளை முதல் 30ம் தேதி வரை டாஸ்மாக்கில் மதுபானம் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் நடக்கும் தேவர் குருபூஜையை முன்னிட்டு நாளை (28ம் தேதி) முதல் 30ம் தேதி (ஞாயிறுக் கிழமை) வரை டாஸ்மாக் கடைகளில் மதுபானம் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதைமீறி விற்பவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில், தேவர் குருபூஜை விழா மற்றும் கும்பாபிஷேக விழா நிகழ்ச்சிகள் நடக்கிறது. இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் கூட்டம் அங்கு திரள இருக்கின்றன.

அங்கு அசம்பாவிதங்கள் நடக்காத வண்ணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதையொட்டி டாஸ்மாக் மதுபான கடைகள் திறந்து விற்பனை செய்யவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Must Read : பொள்ளாச்சி ‘சூர்யவம்சம்’ வீட்டில் ஷூட் செய்யப்பட்டு மாபெரும் ஹிட்கொடுத்த படங்களின் லிஸ்ட்!

இந்நிலையில், நாளை (28ம் தேதி) முதல் 30ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெற உள்ள தேவர் குருபூஜை விழாவினை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து அரசு டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த பார்கள், உரிமம் பெற்ற தனியார் பார்கள் அனைத்தும் மூடப்பட்டு மதுபானம் விற்பனை செய்யக் கூடாது என உத்தரவிடப்பட்டு உள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவை மீறி இந்த 3 நாட்களில் மதுபானங்களை விற்பனை செய்பவர்கள் மீதும் மதுபானங்களை சட்ட விரோதமாக பதுக்கி வைத்து இருந்தாலோ அல்லது மதுபான வகைகளை ஒரு இடத்திலிருந்து பிற இடத்திற்கு எடுத்துச் சென்றாலோ சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட விதிகளின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட கலெக்டர் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Published by:Suresh V
First published:

Tags: Local News, Muthuramalinga Thevar, Ramanathapuram, Tasmac, Thevar Jayanthi