ஹோம் /ராமநாதபுரம் /

ராமேஸ்வரம் கோவிலில் 1 மணி முதல் 7 மணி வரை பக்தர்களுக்கு தடை - காரணம் இதுதான்

ராமேஸ்வரம் கோவிலில் 1 மணி முதல் 7 மணி வரை பக்தர்களுக்கு தடை - காரணம் இதுதான்

ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவில்

ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவில்

Ramanathapuram | ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசாமி கோவிலில் வரும் 25 ஆம் தேதி செவ்வாய் கிழமை நன்பகல் 1 மணி முதல் இரவு 7 மணி வரை பக்தர்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

தீபாவளிக்கு மறுநாள் 25ஆம் தேதி (செவ்வாய் கிழமை) சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இந்த சூரிய கிரகணத்தை முன்னிட்டு ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில் 25ஆம் தேதி நடை திறப்பில் மாற்றம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 25ஆம் தேதி காலை வழக்கம் போல் 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு ஸ்படிக லிங்க தரிசனம் மற்றும் வழக்கமான கால பூஜைகள் நடைபெறும். பகல் 1 மணிக்கு வழக்கம் போல் கோவில் நடை சாத்தப்படும்.

பின்னர் மாலை 4.30 மணிக்கு தீர்த்தவாரி சாமி அக்னி தீர்த்த கடற்கரைக்கு எழுந்தருளி தீர்த்தவாரி பூஜை நடைபெற்று ரத வீதிகளில் வீதி உலா வந்த பின்னர் மீண்டும் மாலை 6.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு கிரகண அபிஷேகம் மற்றும் வழக்கமான பூஜைகள் நடைபெறும்.

Must Read : விருமன், சூரரை போற்று என பல படங்கள் எடுக்கப்பட்ட மதுரையின் முக்கிய ஷூட்டிங் ஸ்பாட்

மேலும், அன்றைய தினம் பகல் 1 மணியிலிருந்து மாலை 6.30 மணி வரையிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யவோ, கோவிலில் உள்ள தீர்த்த கிணறுகளில் நீராடவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

எனவே, அதிகாலை 5 மணி முதல் 1 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை நடை சாத்தப்படும் வரையிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by:Suresh V
First published:

Tags: Local News, Ramanathapuram, Temple