முகப்பு /ராமநாதபுரம் /

தனுஷ்கோடி மன்னார் வளைகுடா கடலில் தத்தி தத்தி சென்ற ஆமைக்குஞ்சுகள்!

தனுஷ்கோடி மன்னார் வளைகுடா கடலில் தத்தி தத்தி சென்ற ஆமைக்குஞ்சுகள்!

X
கடலில்

கடலில் விடப்பட்ட ஆமைக்குஞ்சுகள்

Ramanathapuram News | தனுஷ்கோடி கடல் பகுதியில் ஆமை பொரிப்பகத்தில், பொறிக்கப்பட்ட 335 ஆமை குஞ்சுகளை வனத்துறை அதிகாரிகள் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் விட்டனர், தத்தி தத்தி சென்ற ஆமைகுஞ்சுகளை அங்கிருந்த அனைவரும் பார்த்து ரசித்தனர்.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வனச்சரகத்திற்கு உட்பட்ட தனுஷ்கோடி கடற்கரை பகுதிகளில் ஆமைகள் இட்டுச்செல்லும் முட்டைகளை வனத்துறையினரால் சேகரிக்கப்பட்டு, முட்டைகளை பாதுகாத்து குஞ்சு பொறிக்கும் பொறிப்பகமானது முகுந்தராயன் சத்திரம் அருகே உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆமை குஞ்சுகள் கடற்கரையில் முட்டையிடுவது வனத்துறை அதிகாரிகள் சேகரித்து பாதுகாத்து, ஆமைகுஞ்சுகளை மன்னார் வளைகுடா கடல் பகுதியில் விடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

கடலில் விடப்பட்ட ஆமைக்குஞ்சுகள்

இந்நிலையில், வனத்துறை அதிகாரிகள் தனுஷ்கோடி மன்னார் வளைகுடா கடல் பகுதியில் குஞ்சு பொறிப்பகத்தில் பொறிக்கப்பட்ட 335 ஆமை குஞ்சுகளை மலர்தூவி கடலில் விட்டனர். அதிகாலை 5 மணிமுதல் 20-க்கும் மேற்பட்ட தன்னார்வலுடன் வனத்துறை அதிகாரிகள், தனுஷ்கோடி கடற்பகுதியில் 5 இடங்களில், 665 ஆமை முட்டைகளை சேகரித்து பொறிப்பகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். கடலில் விடப்பட்ட ஆமைகுஞ்சுகள் தத்தி தத்தி கடலுக்குள் சென்றதை அங்கிருந்த தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டுரசித்தனர்.

top videos
    First published:

    Tags: Local News, Ramanathapuram