ஹோம் /ராமநாதபுரம் /

சாலை விதிமுறைகள் குறித்து இளைஞர்களுக்கு இந்திய ராணுவ வீரர்கள் விழிப்புணர்வு 

சாலை விதிமுறைகள் குறித்து இளைஞர்களுக்கு இந்திய ராணுவ வீரர்கள் விழிப்புணர்வு 

இந்திய ராணுவ வீரர்கள் விழிப்புணர்வு 

இந்திய ராணுவ வீரர்கள் விழிப்புணர்வு 

Awareness of Indian Army soldiers | இந்திய ராணுவ வீரர்களின் போக்குவரத்து விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணியானது நான்காவது நாளாக ராமநாதபுரம் மாவட்டத்தில்  நடைபெற்று, சாலை விதிமுறைகள் குறித்து இளைஞர்களுக்கு விழிப்புணர்வு 

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Ramanathapuram, India

  இந்திய ராணுவ வீரர்களின் போக்குவரத்து விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணியானது நான்காவது நாளாக ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்று, சாலை விதிமுறைகள் குறித்து இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

  இந்திய ராணுவத்தின் ஹைதராபாத் பீரங்கி மையம் தொடங்கப்பட்டு வைர விழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு 8 ராணுவ வீரர்கள் ஒன்றிணைந்து 3000 கிலோமீட்டர் தூரத்திற்கு இருசக்கர வாகன விழிப்புணர்வு பயணத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.

  இந்நிலையில், கடந்த 23ஆம் தேதி ஐதராபாத்தில் தொடங்கிய இந்த இருசக்கர பேரணியானது பெங்களூர், மதுரை வழியாக இந்தியாவின் தென்கோடி பகுதியான ராமேஸ்வரத்திற்கு வருகை தந்தனர்.

  இதையும் படிங்க : ராமேஸ்வரத்தில் கடல் மண்ணில் உருவான சுயம்பு அபய ஆஞ்சநேயர் கோயில் வரலாறு தெரியுமா?

  ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் தனுஷ்கோடி, முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் தேசிய நினைவகம், உச்சிப்புளி ஐஎன்எஸ் பருந்து விமான படைத்தளம் உள்ளிட்ட பகுதிகளில் லெப்டினென்ட் கர்னல் மனோஜ் தலைமையில் வருகை தந்த குழுவினர் இந்திய ராணுவத்தில் சேர்வது, இளைஞர்களுக்கு சாலை பாதுகாப்பில் கட்டாயம் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

  உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

  இதையடுத்து, ராமநாதபுரத்தில் இருந்து திருச்சிராப்பள்ளி, புதுச்சேரி, ஸ்ரீஹரிகோட்டா வழியாக வரும் நான்காம் தேதி ஹைதராபாத் சென்றடைய உள்ளனர். மேலும் முன்னாள் ராணுவத்தினரை சந்தித்து பேச உள்ளதாக இக்குழுவினர் கூறினர்.

  Published by:Karthi K
  First published:

  Tags: Local News, Ramnad