முகப்பு /ராமநாதபுரம் /

ராமநாதபுரம் மாவட்ட வரலாற்று சிறப்புமிக்க இடங்கள், பாரம்பரியங்கள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு..

ராமநாதபுரம் மாவட்ட வரலாற்று சிறப்புமிக்க இடங்கள், பாரம்பரியங்கள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு..

மாணவர்களுக்கு விழிப்புணர்வு

மாணவர்களுக்கு விழிப்புணர்வு

Historical Places in Ramanathapuram | ராமேஸ்வரம், பாம்பன், குந்துகால், தனுஷ்கோடி, பொந்தன்புளி மரம், நம்புநாயகி அம்மன் தாழை மரங்கள், மணல்குன்றுகள், அரிச்சல்முனை ஆகிய  இடங்களுக்கு மரபுநடை பயணமானது நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரத்தில் நடைபெற்றவுள்ள 5வது புத்தக திருவிழாவை முன்னிட்டு மாவட்டத்திலுள்ள வரலாற்று சிறப்புமிக்க இடங்கள், பாரம்பரியங்கள், குறித்த விழிப்புணர்வு மாணவர்களுக்கு ஏற்படுத்தப்படுத்தினர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 5வது புத்தக திருவிழா ராஜா மேல்நிலைப்பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் நடந்து வருகிறது. 9ம் தேதி தொடங்கி வரும் 19ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த விழாவினை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க இடங்கள், பாரம்பரியங்கள் குறித்து பள்ளி, கல்லூரி, மாணவர்களிடையே விழிப்புணர்வை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், ராமேஸ்வரம், பாம்பன், குந்துகால், தனுஷ்கோடி, பொந்தன்புளி மரம், நம்புநாயகி அம்மன் தாழை மரங்கள், மணல்குன்றுகள், அரிச்சல்முனை ஆகிய இடங்களுக்கு மரபுநடை பயணமானது நடைபெற்றது. இதனை கோட்டாட்சியர் கோபு கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த மரபுநடை பயணத்தில், மரபுநடை ஒருங்கிணைப்பாளர் ராஜகுரு மாணவர்களுக்கு ராமேஸ்வரம் தீவு பகுதியில் உள்ள வரலாற்று சிறப்புகள், பராம்பரிய மிக்க இடங்கள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பள்ளி, கல்லூரியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர், இறுதியாக ராமேஸ்வரம் பற்றிய சிறுநூலானது மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

First published:

Tags: Local News, Ramanathapuram