முகப்பு /ராமநாதபுரம் /

நம்ம ஊரு சூப்பரு திட்டம்.. ராமநாதபுரத்தில் குப்பை இல்லா கிராமம் குறித்து விழிப்புணர்வு..

நம்ம ஊரு சூப்பரு திட்டம்.. ராமநாதபுரத்தில் குப்பை இல்லா கிராமம் குறித்து விழிப்புணர்வு..

X
ராமநாதபுரத்தில்

ராமநாதபுரத்தில் குப்பை இல்லா கிராமம் குறித்து விழிப்புணர்வு

Awarness Rally in Ramanathapuram : ராமநாதபுரத்தில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திட‌ நம்ம ஊர் சூப்பரு திட்டம் குறித்து விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் தொடங்கியது.

  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரத்தில் குப்பை இல்லா கிராமம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

தமிழ்நாட்டில் உள்ள கிராமங்களில் குப்பை இல்லா கிராமத்தினை உருவாக்கி சுகாதாரத்தை காப்பதற்காக நம்ம ஊர் சூப்பரு திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில், பொதுமக்கள் குப்பைகளை மக்கும் குப்பை மக்கா குப்பை என தரம் பிரித்து, மக்கும் குப்பைகள் வீட்டிலேயே உரமாக பயன்படுத்த வேண்டும் எனவும் மக்காத குப்பைகளை தூய்மை பணியாளர்களிடம் கொடுக்க வேண்டும் எனவும் பொது இடங்களில் குப்பைகளை கொட்டி அசுத்தம் செய்யக்கூடாது என்பது உள்ளடக்கிய கருத்துக்களை முன்வைத்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

ராமநாதபுரத்தில் குப்பை இல்லா கிராமம் குறித்து விழிப்புணர்வு

மேலும், வீடுகள் மற்றும் தெருக்களில் கழிவுநீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும், வீடுகளில் மழைநீர் சேமிப்பை பராமரிக்க வேண்டும் உள்ளிட்டவை குறித்தும் விழிப்புணர்வு பேரணியில் பதாகைகள் வைக்கப்பட்டிதுந்தது.  இந்த பேரணியை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தொடங்கி வைத்தார். பின்பு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos
    First published:

    Tags: Local News, Ramanathapuram