முகப்பு /ராமநாதபுரம் /

கண்நீர் அழுத்தநோய்‌ விழிப்புணர்வு.. ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சார்பில் பேரணி..

கண்நீர் அழுத்தநோய்‌ விழிப்புணர்வு.. ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சார்பில் பேரணி..

X
கண்நீர்

கண்நீர் அழுத்தநோய்‌ விழிப்புணர்வு

Ramanathapuram News | ராமநாதபுரம் அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியின் சார்பில் உலக கண்நீர் அழுத்தநோய் பற்றிய விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Ramanathapuram, India

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 2வது வாரத்தில் உலக கண்நீர் நோய் தினமாக அறிவிக்கப்பட்டு, உலக கண் நீர் நோய் வராமல் தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கண்நீர் அழுத்த நோய் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இந்த பேரணியில் 2ம் ஆண்டு பயிலும் மாணவ, மாணவிகள் மற்றும் பயிற்சி செவிலியர்கள் கண் நீர்அழுத்த நோய் விழிப்புணர்வு தொடர்பான பதாகைகளை ஏந்தியவாறு, விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பி பேரணியாக நகரின் முக்கிய பகுதிகளில் ஊர்வலமாக வந்தனர். இதையடுத்து, கல்லூரியில் மாணவர்கள் சார்பில் கண் நோய் தொடர்பான விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது. இதில் மருத்துவர்கள், செவிலியர்கள், பயிற்சி செவிலியர்கள், மாணவர்கள் மற்றும் கண் சிகிச்சை பெறும் நோயாளிகள் கலந்து கொண்டனர்.

First published:

Tags: Local News, Ramanathapuram