ஹோம் /ராமநாதபுரம் /

ராமேஸ்வரத்தில் ஆட்டோ கவிழ்ந்து விபத்து - 4பேர் படுகாயம்

ராமேஸ்வரத்தில் ஆட்டோ கவிழ்ந்து விபத்து - 4பேர் படுகாயம்

ஆட்டோ விபத்து

ஆட்டோ விபத்து

ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடிக்கு செல்ல அளவுக்கு அதிகமான பக்தர்களை ஏற்றிச் சென்றதால் நிலை தடுமாறி தலைகீழாக ஆட்டோ கவிழ்ந்து விபத்து, நான்கு பேர் படுகாயம் 

 • Local18
 • 1 minute read
 • Last Updated :
 • Ramanathapuram, India

  ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடிக்கு செல்ல அளவுக்கு அதிகமான பக்தர்களை ஏற்றிச் சென்றதால் நிலை தடுமாறி தலைகீழாக ஆட்டோ கவிழ்ந்து விபத்து, நான்கு பேர் படுகாயமடைந்தனர்.

  ஆந்திர மாநிலத்தில் உள்ள மேற்கு கோதாவரி பகுதியில் இருந்து ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய ஐயப்ப பக்தர்கள் வந்துள்ளனர். ராமநாதசுவாமி திருக்கோவில் தரிசனம் முடித்து விட்டு ஆட்டோவில் தனுஷ்கோடிக்கு சுற்றி பார்க்க சென்றுள்ளனர். அப்போது ஆட்டோவில் 13 நபர்களை ஏற்றிச்சென்றதாக கூறப்படுகிறது.

  தனுஷ்கோடி செல்லும் வழியில் கோதண்டராமர் கோவிலை தாண்டி செல்லும் போது ஆட்டோவானது வேகமாக சென்றதால் நிலை தடுமாறி விபத்துக்கு உள்ளாகியது.இதையடுத்து, பயணம் செய்த பக்தர்களில் எட்டுக்கும் மேற்பட்டவர்களுக்கு சிறுகாயமும், நான்கு பேருக்கு பலத்த காயமும் ஏற்பட்டுள்ளது.

  ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தனுஷ்கோடி காவல்துறையினர் ஆட்டோவை மீட்டு காவல் நிலையத்தில் வைத்து ஆட்டோ ஓட்டுனர் மற்றும் சுற்றுலா வந்த பக்தர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

  Also Read: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 2026-ம் ஆண்டிற்குள் கட்டி முடிக்கப்படும் - மத்திய அரசு

  தற்போது, கார்த்திகை மாதம் என்பதால் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவித்து ராமநாதசுவாமி திருக்கோவில் தரிசனம் செய்ய அதிகளவில் வந்த வண்ணம் உள்ளனர். மேலும் இதுபோன்ற செயல்கள் நடக்காமல் இருக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

  Published by:Ramprasath H
  First published:

  Tags: Local News, Ramanathapuram, Rameshwaram, Tamil News