ஹோம் /ராமநாதபுரம் /

காசி தமிழ் சங்கமம் : ராமேஸ்வரத்தில் எஸ்.எஃப்.ஐ ரயில் மறியல் போராட்ட முயற்சி

காசி தமிழ் சங்கமம் : ராமேஸ்வரத்தில் எஸ்.எஃப்.ஐ ரயில் மறியல் போராட்ட முயற்சி

போராட்டத்தில் ஈடுபட முயன்ற மாணவர்களை போலீசார் தடுக்கின்றனர்

போராட்டத்தில் ஈடுபட முயன்ற மாணவர்களை போலீசார் தடுக்கின்றனர்

Ramanathapuram District News : ராமேஸ்வரத்தில் இந்திய மாணவர் சங்கத்தினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து காசிக்கும் தமிழகத்திற்கும் உள்ள பழங்கால தொடர்புகளை மீட்டெடுக்கும் வகையில் காசி தமிழ் சங்கமம் என்ற நிகழ்ச்சி நவம்பர் 16-ம் தேதி தொடங்கி டிசம்பர் 19-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மாணவர்கள், ஆசிரியர்கள், தமிழக பாஜக கட்சி, ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் என‌ பலரையும் ரயிலில் தமிழகத்தில் இருந்து காசிக்கு அழைத்து சென்று நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வைத்தனர்.

இந்நிலையில், காசி தமிழ் சங்கம நிகழ்ச்சிக்கு மாணவர்களை அழைத்துச் சென்று அவர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தை புகுத்துவதாகவும், ஹிந்துதுவ பிரச்சாரங்களை செய்வதாக கூறி எதிர்ப்பு தெரிவித்து இந்திய மாணவர்கள் சார்பில் ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் ரயிலை மறித்து ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர்.

இதையும் படிங்க : ராமநாதபுரம் மாவட்டத்தில் கிராம உதவியாளர், தலையாரி தேர்வு நடைபெறும் இடங்கள் அறிவிப்பு

அதன்படி இந்திய மாணவர் சங்கத்தினர் சுமார் 20க்கும் மேற்பட்டோர் மத்திய அரசுக்கு, எதிராக கோஷங்களை எழுப்பியபடி ராமேஸ்வரம் ரயில் நிலையம் நோக்கி பேரணியாக வந்தனர்.

ரயில் மறியலில் ஈடுபட வந்த இந்திய மாணவர் சங்கத்தினரை ராமேஸ்வரம் ரயில் நிலைய நுழைவு வாயிலில் வைத்து காவல்துறையினர் தடுப்புகளை அமைத்து தடுத்து நிறுத்தினர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதனால் இந்திய மாணவர் சங்கத்தினருக்கும், காவல்துறையினருக்கும் இடையே சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

First published:

Tags: Local News, Ramanathapuram