Home /ramanathapuram /

ராமநாதபுரம் அரசுப் பள்ளியில் தொல்பொருள் கண்காட்சி - ஆர்வத்துடன் பங்கேற்ற மாணவ, மாணவிகள்

ராமநாதபுரம் அரசுப் பள்ளியில் தொல்பொருள் கண்காட்சி - ஆர்வத்துடன் பங்கேற்ற மாணவ, மாணவிகள்

தொல்பொருள்

தொல்பொருள் கண்காட்சியில் மாணவர்கள்

ராமேஸ்வரத்திலுள்ள அரசுப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு தொல்லியல் பொருள்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டன.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Rameswaram, India
தமிழ்நாட்டின் கலை, பாரம்பரியம், தொல்லியல் பெருமைகள் மற்றும் கல்வெட்டுகள் குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் புதுரோடு உயர்நிலைப் பள்ளியில் தொன்மைப் பாதுகாப்பு மன்றத் துவக்க விழா மற்றும் தொல்லியல் கண்காட்சி நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடிக்கு செல்லும் ராமேஸ்வரம் ரோடு என்றழைக்க கூடிய புதுரோட்டில் அமைந்துள்ள உயர்நிலைப் பள்ளியில் மாணவ மாணவியர்களுக்கு தொல்லியல் துறையின் சார்பில் கண்காட்சி நடைபெற்றது. இதுவரையிலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள தொல்பொருள்கள் மற்றும் தமிழ்நாட்டில் கட்டிடக்கலை நிறைந்த இடங்கள் பற்றி அறிந்துகொள்ளும் வகையில் இக்கண்காட்சி நடைபெற்றது.

பார்வைக்கு வைக்கப்பட்ட தொல்பொருள்கள்


தமிழ்நாட்டின் கலை, பண்பாடு, வரலாறு மற்றும் தொல்லியல் பொருட்கள் பற்றி பள்ளி கல்லூரி மாணவர்கள் அறிந்துகொள்ளவும், பாரம்பரிய சின்னங்களைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்தும் பள்ளி, கல்லூரிகளில் தொன்மைப் பாதுகாப்பு மன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பார்வைக்கு வைக்கப்பட்ட தொல்பொருள்கள்


இந்த கண்காட்சியில் பள்ளி மாணவர்கள், மாணவியர்கள் 500 பேர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். தொல்லியல் பொருட்களைப் பார்த்து அவற்றின் சிறப்புகளை அறிந்து கொண்டனர். பாடப் புத்தகத்தில் பார்த்ததை நேரில் பார்ப்பது மிகவும் நன்றாக இருந்தது என்றும் இது போன்ற பழங்காலத்து பொருட்கள் நாங்களும் சேகரிக்க தொடங்குவோம் என்றும் மாணவர்கள் உற்சாகமாக தெரிவித்தனர்.

பள்ளி மாணவர்களிடம் பேசும் தொல்பொருள் அதிகாரி


இந்த தொல்லியல் கண்காட்சியில் பழைய, புதிய, நுண் கற்காலக் கருவிகள், கருப்பு சிவப்பு நிற பானை ஓடுகளுடன் உலகப் பாரம்பரியச் சின்னங்கள், குடைவரைக் கோயில்கள், சேதுபதி கோட்டைகள், கற்றளிகளின் புகைப்படங்களும் இடம் பெற்றிருந்தன. மாணவ, மாணவிகள் நேரில் பார்த்து அறிந்து கொண்டனர்.

இக்கண்காட்சி குறித்து பேசிய தொல்லியல் ஆய்வாளர் ராஜகுரு, ‘கீழடி அகழாய்வுக்குப் பின் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே தொல்லியல் பொருட்கள் குறித்து அறிந்து கொள்வதில் ஆர்வம் அதிகரித்து வருகிறது. பள்ளிகளில் செயல்பட்டு வரும் தொன்மைப் பாதுகாப்பு மன்றங்கள் மூலம் நடத்தப்படும் கண்காட்சி, பயிற்சிகள் மூலம் மாணவர்களிடம் தொல்லியல், அகழாய்வு, கல்வெட்டு, பாரம்பரியம் பற்றிய விழிப்புணர்வை உருவாக்க முடியும்’ என்றார்.

ராமநாதபுரத்தில் சேதுபதி மன்னர் ராமலிங்க விலாசமானது தென்னிந்தியாவில் ஓவியங்கள் நிறைந்த அரண்மனையாகும். கமுதியில் உள்ள கோட்டை, உத்திரகோசமங்கை ஆலயம் மற்றும் திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோவில் ஆகியவற்றை பள்ளி, கல்லூரி மாணவர்கள் பார்த்து அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். இது தமிழ்நாடு தொல்லியல் துறையின் சார்பில் பாதுகாக்கப்படுகிறது.
Published by:Karthick S
First published:

Tags: Local News, Ramanathapuram

அடுத்த செய்தி