ஹோம் /ராமநாதபுரம் /

50 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் - ராமநாதபுரம் கலெக்டர் அறிவிப்பு

50 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் - ராமநாதபுரம் கலெக்டர் அறிவிப்பு

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

Village Panchayat Secretary Jobs | ராமநாதபுரம் மாவட்ட வருவாய்துறையில் காலியாக உள்ள 50 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்கள் அன்லைனில் விண்ணப்பிக்கலாம் என ராமநாதபுரம் ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

தமிழ்நாட்டின் வருவாய்க் கிராமங்களின் அதிகாரியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர்களுக்கு கீழாக கிராம உதவியாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். வரி வசூலித்தல், கிராம கணக்குகளை நிர்வகித்தல், நில வருவாய் ஆவணங்களைத் தயாரித்தல், கணக்குகளை முறையாக சரியாக வைத்து கொள்ளுதல், பிறப்பு, இறப்பு போன்ற பல்வேறு பதிவேடுகளை தயாரித்தல் மற்றும் புதுப்பித்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

இந்த பணிக்கு, ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் அருந்ததியினர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர், அதிகபட்சமாக 37 வயது வரையும் இருத்தல் வேண்டும். பொதுப்பிரிவினர் அதிகபட்சமாக 32 வயதுக்குள் இருக்க வேண்டும். குறைந்தபட்ச வயது அனைத்து பிரிவினருக்கு 21க்கு மேல் இருக்க வேண்டும்.

இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்கள், குறைந்தபட்சம் 5ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். அறிவிக்கப்பட்ட பதவிக்கான வட்ட எல்லைக்குள் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும். வாகனம்ஓட்டும் திறன் இருக்க வேண்டும். இருதாரமணம் செய்தவராக இருக்கக்கூடாது என்பது விதிமுறை.

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்ட வருவாய்துறையில் 9 தாலுகா அலுவலகங்களில் காலியாக உள்ள 50 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அளிக்க கோரி கடந்த மாதம் 10, 11ஆம் தேதிகளில் மாவட்டத்தில் உள்ள 9 தாசில்தார்களும் அறிக்கை வெளியிட்டனர்.

Must Read : விழுப்புரத்தில் பிறந்து நடிப்புக்கே இலக்கணம் தந்து... சர்வதேச விருதை வென்ற நடிகர் - இவர் யார் தெரியுமா? 

கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையரின் கடிதத்தின்படி கிராம உதவியாளர்கள் பணியிடங்கள் வழங்க கோரப்படும் விண்ணப்பங்கள் அனைத்தும் இணையதளம் வாயிலாக மட்டுமே பெறப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் www.tn.gov.in, cra.tn.gov.in, ramanathapuram.nic.in ஆகிய இணையதள முகவரிகளில் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

எனவே நேரடியாகவோ, தபால் மூலமாகவோ விண்ணப்பித்தவர்கள் இணையதளம் மூலமாக தவறாது விண்ணப்பிக்க வேண்டும் என்று ராமநாதபுரம் ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு பணியிடங்களுக்கு விண்ணப்பித்து, பயன்பெறுங்கள்.

Published by:Suresh V
First published:

Tags: Job vacancies, Local News, Ramanathapuram