ஹோம் /ராமநாதபுரம் /

ராமேஸ்வரத்தில் சுற்றுலா பயணிகளை குழப்பும் வழிகாட்டு பலகைகள்.. காரணம் என்ன?

ராமேஸ்வரத்தில் சுற்றுலா பயணிகளை குழப்பும் வழிகாட்டு பலகைகள்.. காரணம் என்ன?

X
ராமநாதபுரம்

ராமநாதபுரம்

Ramanathapuram District News : ராமேஸ்வரம் நகராட்சியில் சுற்றுலாப் பயணிகளுக்காக வைக்கப்பட்டுள்ள வழிகாட்டுப் பலகை அவர்களைக் குழப்பும் வகையில் உள்ளது.

  • Local18
  • 2 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமேஸ்வரம் நகராட்சி வாகனம் நிறுத்தும் இடத்திற்கு செல்ல தனிநபர்களால் வைக்கப்பட்ட பதாகையால் வாகனம் ஓட்டிகள் குழப்பம் அடையும் சூழல் உள்ளது. எனவே, குழப்பும் வகையில் உள்ள பதாகைகளை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் காவல்துறையினருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் முக்கிய புண்ணிய ஸ்தலமாகவும், பன்னிரண்டு ஜோதிடலிங்கங்களில் ஒன்றாகவும் விளங்குவதால் இங்கு வெளிமாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

இவ்வாறு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்காக கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு இந்து அறநிலைத்துறையின் சார்பில் வாகன நிறுத்தும் இடம் ஜே.ஜே நகர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் அமைக்கப்பட்டது.

இதையும் படிங்க : உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு சிறப்பாக பணியாற்றிய செவிலியர்களுக்கு ராமநாதபுரம் கலெக்டர் பாராட்டு

இந்நிலையில், வாகனங்கள் கூடுதலாக வருவதால் நகராட்சி நிர்வாகம் சார்பில் ஈஸ்வரி அம்மன் கோவில் தெருவில் நகராட்சி பார்க்கிங் அமைக்கப்பட்டது. தற்போது இந்த பார்க்கிங் குத்தகை விடப்பட்டுள்ளது.

கடந்த வாரம் நவீன வசதிகளுடன் கூடிய நகராட்சி நிர்வாகம் வாகன நிறுத்துமிடம் என்று செல்லும் வழியில்விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது. இந்த பதாகைகயில் கோவில் நிர்வாகம் செல்லும் பார்க்கிங் வழியை அம்புறிகுறிகாட்டு அடிக்கப்பட்டுள்ளது.

நகராட்சி பார்க்கிங் செல்லும் வழியை நேராக அம்புக்குறி காட்ட வேண்டும். ஆனால், இதில் இடதுபக்கம் செல்லுமாறு அம்புக்குறி காட்டப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : சுற்றுலா பயணிகள் என்ஜாய் பண்ண ஏற்ற இடம் - கன்னியாகுமரி குற்றியார் இரட்டை அருவி!

இந்த இடது பக்கத்தில் பத்திரகாளி அம்மன் கோவில் பகுதி உள்ளது. வரும் சுற்றுலா பயணிகள் பாதை தெரியாமல் அங்கு சென்று விடுகின்றனர். சுற்றுலா பேருந்து போன்றவை உள்ளே சென்று விட்டால் திரும்ப முடியாத நிலை உருவாகும். நகராட்சி பார்க்கிங் செல்லும் வழியில் சாலையே தெரியாத அளவிற்கு மின்விளக்கு இன்றி இருட்டாக உள்ளது. சிலர் அவ்வழியில் மது அருந்துகின்றனர். இந்த பார்க்கிங்கில் கண்காணிப்பு கேமரா வசதிகளும் கிடையாது.

ஆனால் இந்து அறநிலையத்துறையின் வாகனம் நிறுத்தும் இடத்திற்கு செல்லும் வழியில் எந்தவொரு ஆபத்தும் இல்லாமல் கண்காணிப்பு கேமராவுடன் உள்ளது. இவ்வழியாக வந்து நகராட்சி பார்க்கிங் செல்வது போல அமைத்துகோவில் பார்க்கிங்கில் ரூ.20 கட்டணமாகவும், நகராட்சி பார்க்கிங்கில் ரூ.50 கட்டணமாகவும் வசூலிக்கப்பட்டுகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதுகுறித்து நகராட்சி ஆணையாளரை தொடர்பு கொண்டு வழிகாட்டுப் பதாகை குறித்து பேசியதற்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் வைக்கப்பட்டது இல்லை, அதே பார்த்து உடனடியாக அப்புறப்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

First published:

Tags: Local News, Ramanathapuram