முகப்பு /ராமநாதபுரம் /

ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள்!

ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள்!

X
அங்கன்வாடி

அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்

ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 1000-த்திற்கு மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 1000-த்திற்கு மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள், தமிழக அரசு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் ஒப்பந்தத்தின் அடிப்படையில், அங்கன்வாடி மையங்களில் ஊழியர்களாகவும், உதவியாளர்களாக பணிபுரிபவர்கள் அரசு ஊழியர்களாக நியமிக்கப்படுவார்கள் என்றும் அதேபோல் அவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்படும் என்றும் வாக்குறுதியாக அளித்திருந்தாக குற்றம்சாட்டினர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த வாக்குறுதியை நிறைவேற்ற கோரியும், ஓய்வுபெறும் ஊழியருக்கு ரூ. 9 ஆயிரமும், ஓய்வுபெரும் உதவியாளருக்கு ரூ.5 ஆயிரமும் வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து 1000-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

top videos
    First published:

    Tags: Local News, Ramanathapuram