ஹோம் /ராமநாதபுரம் /

பரமக்குடியில் கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே வந்த இருசக்கர வாகனத்தில் மோதியதில் பொழிகால் கிராமத்தை சேர்ந்தவர் பலி.

பரமக்குடியில் கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே வந்த இருசக்கர வாகனத்தில் மோதியதில் பொழிகால் கிராமத்தை சேர்ந்தவர் பலி.

X
கட்டுப்பாடை

கட்டுப்பாடை இழந்த கார் எதிரே வந்த இருசக்கர வாகனத்தில் மோதி முதியவர் பரிதாபமாக பல

Ramanathapuram News | மதுரையில் இருந்து பரமக்குடி செல்லும் நான்கு வழிச்சாலையில் வேந்தோணி விளக்கு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்து

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

பரமக்குடியில் கட்டுபாட்டை இழந்து இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதியதில் முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலே உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே தினைக்குளத்தை சேர்ந்த போஸ் (43) என்பவர் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். தற்போது விடுமுறைக்காக சொந்த ஊரான பரமக்குடிக்கு வந்துள்ளார்.

இந்நிலையில் இவர் தனது காரில் மதுரையில் இருந்து பரமக்குடி செல்லும் நான்கு வழிச்சாலையில் வேந்தோணி விளக்கு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து எதிர்திசையில் நின்று கொண்டிருந்த இரண்டு கார்கள் மீது வேகமாக மோதி அதன் பின் எதிரே வந்த இருசக்கர வாகனத்தில் மோதி உள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இருசக்கர வாகனத்தில் மோதியதில் அதில் வந்த பொழிகால் கிராமத்தைச் சேர்ந்த முத்துவேல்‌ (65) என்கிற முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்‌, காரில் இருந்தவர்கள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். இச்சம்பவம் குறித்து பரமக்குடி டவுன் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

First published:

Tags: Local News, Ramanathapuram