ஹோம் /ராமநாதபுரம் /

ராமநாதபுரத்தில் 30,000 மலர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட கண்காட்சி- தொடங்கிவைத்த ஆட்சியர்

ராமநாதபுரத்தில் 30,000 மலர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட கண்காட்சி- தொடங்கிவைத்த ஆட்சியர்

X
மலர்

மலர் கண்காட்சி

Ramanathapuram | ராமநாதபுரத்தில் தோட்டக்கலை துறை சார்பில் மலர் மற்றும் காய்கறிகளைக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்ட கண்காட்சி நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரத்தில் தோட்டக்கலை துறை சார்பில் மலர் மற்றும் காய்கறிகளைக் கொண்டு பல்வேறு விதமான உருவங்களில் அமைக்கப்பட்ட கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ் துவக்கி வைத்தார். முதல் நாள் என்பதால் பொதுமக்கள் வருகை இன்றி காணப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை செல்லும் வழியில் உள்ள அச்சடிப்பிரம்பு பகுதியில் அமைந்துள்ள பாலை பூங்காவில் தோட்டக்கலை துறையின் சார்பில் மூன்று நாள் நடைபெறும் மலர்கள் மற்றும் காய்கறிகளால் உருவாக்கப்பட்ட கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ் துவக்கி வைத்து பார்வையிட்டார்.

மலர் கண்காட்சி

தோட்டக்கலை துறை சார்பில் 30 ஆயிரம் மலர்களைக் கொண்டும் பல்வேறு விதமான காய்கறிகளைக் கொண்டும் கேரட், சுரக்காய், தக்காளி, முட்டைக்கோஸ், வெண்டைக்காய், பூசணிக்காய், கத்தரிக்காய், கேரட், பீட்ருட், வாழைக்காய், முள்ளங்கி போன்ற காய்கறிகளைக் கொண்டு முதலை, மீன், பிஎஸ்எல்வி ராக்கெட், மயில், சேவல், டைனோசர், வண்ணத்துப்பூச்சி, யானை, பாம்பன் ரயில் தூக்குபாலம், மற்றும் திருவள்ளுவர் போன்ற உருவங்கள் அழகாக தத்ரூபமாக அமைக்கப்பட்டது காண்போரை கவரும் விதமாக இருந்தது

முதல் நாள் என்பதால் மலர்கள் மற்றும் காய்கறிகளால் உருவாக்கப்பட்ட கண்காட்சியில் எதிர்பார்த்த அளவு பொதுமக்கள் இல்லாமல் கண்காட்சி வெறிச்சோடி காணப்பட்டது. பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து கண்டுகளிக்க வேண்டும் என்று தோட்டக்கலை துறையினர் கேட்டுக்கொண்டனர்.

செய்தியாளர்: மனோஜ், ராமநாதபுரம்.

First published:

Tags: Local News, Ramanathapuram