முகப்பு /ராமநாதபுரம் /

சித்திரை மாத அமாவாசை.. ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் குவிந்த பக்தர்கள்..

சித்திரை மாத அமாவாசை.. ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் குவிந்த பக்தர்கள்..

X
ராமேஸ்வரம்

ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் குவிந்த பக்தர்கள்

Rameshwaram Agni Theertham : சித்திரை மாத சர்வ அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்து சென்றனர்.

  • Last Updated :
  • Rameswaram, India

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி திருக்கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள், விடுமுறை நாட்கள் மற்றும் அமாவாசை நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து வழிப்பட்டு செல்வர்.

அந்த வகையில் ராமநாதசுவாமி திருக்கோயிலில் அமாவாசை தினத்தன்று ஏப்ரல் (19) கோவிலுக்கு எதிரே உள்ள அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடி தன்னுடன் வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்குத் திதி, பிண்டம் வைத்து தர்ப்பணம் கொடுத்தால் அவர்களின் ஆத்மா சாந்தி அடையும் என்பது ஐதீகமாக கொண்டுள்ளனர்.

இந்நிலையில், சித்திரை மாதம் சர்வ அமாவாசை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலிருந்தும், வெளிமாநிலங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடி முன்னோர்களுக்குத் திதி, தர்ப்பணம் கொடுத்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதனைத்தொடர்ந்து, பக்தர்கள் ராமநாதசுவாமி திருக்கோவில் வளாகத்தில் உள்ள 22 புனித தீர்த்தத்தில் புனித நீராடி, சுவாமி - அம்பாள் தரிசனம் செய்து சென்றனர். பக்தர்களின் பாதுகாப்பிற்காக நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

top videos
    First published:

    Tags: Local News, Ramanathapuram, Rameshwaram