ஹோம் /ராமநாதபுரம் /

பரமக்குடியில் திருமகன் ஈவேரா மறைவிற்கு அனைத்து கட்சியினர் மலர்தூவி மௌன அஞ்சலி 

பரமக்குடியில் திருமகன் ஈவேரா மறைவிற்கு அனைத்து கட்சியினர் மலர்தூவி மௌன அஞ்சலி 

X
பரமக்குடியில்

பரமக்குடியில் திருமகன் ஈவேரா மறைவிற்கு அனைத்து கட்சியினர் மலர்தூவி மௌன அஞ்சலி 

Ramanathapuram News | பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன், திமுக, காங்கிரஸ், அதிமுக, போன்ற அனைத்து கட்சிகள் சார்பில் ஏராளமானோர் கலந்து கொண்டு மறைந்த எம்எல்ஏ திருமகன் ஈவேராவுக்கு அஞ்சலி

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

பரமக்குடியில் ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவேரா மறைந்ததை ஒட்டி அனைத்து கட்சிகள் சார்பில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது, ஏராளமானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் மற்றும் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் மகனும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏவுமான திருமகன் ஈவேரா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் கடந்த 4ஆம் தேதி உயிரிழந்தார்.

இந்நிலையில், எம்.எல்.ஏ திருமகன் ஈவேரா மறைவிற்கு ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அனைத்து கட்சிகள் சார்பில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. திருவுருவப்படத்திற்கு மலர் தூவி இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதில் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன், திமுக, காங்கிரஸ், அதிமுக, போன்ற அனைத்து கட்சிகள் சார்பில் ஏராளமானோர் கலந்து கொண்டு மறைந்த எம்எல்ஏ திருமகன் ஈவேராவுக்கு அஞ்சலி செலுத்தினர்.

First published:

Tags: Local News, Ramanathapuram