ஹோம் /ராமநாதபுரம் /

ராமேஸ்வரத்தில் கைவினை பொருட்கள் கண்காட்சி

ராமேஸ்வரத்தில் கைவினை பொருட்கள் கண்காட்சி

X
அகில

அகில இந்திய கைவினை பொருள்கள் கண்காட்சி; குறைந்த விலையில் தரமான பொருட்கள் விற்பனை

Ramanathapuram News | வியாபாரம் நன்றாக இருந்ததாகவும், நினைத்த அளவிற்கு வியாபாரம் இல்லை என்றும் மக்களின் வரவேற்பு குறைவு என வியாபாரிகள் வருத்தம் தெரிவித்தனர்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமேஸ்வரத்தில் இந்திய ஜவுளித்துறையின் சார்பில் அகில இந்திய கைவினைப் பொருட்கள் கண்காட்சி, 50க்கும் மேற்பட்ட கைவினை பொருள்கள் காட்சிப் படுத்தப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள தனியார் மஹாலில் இந்திய ஜவுளித்துறை சார்பில் அகில இந்திய கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனையானது இந்தியாவில் உள்ள அனைத்து பகுதியிலும் இருந்து கொண்டு வரப்பட்ட கைவினை பொருள்கள் வைத்து 50-க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில் ஆடைகள், துணிகள், வீட்டு உபயோக பொருட்கள், அலங்காரப் பொருட்கள், விதவிதமான கவரிங் நகைகள், வாழைநாற்றில் செய்யப்பட்ட வீட்டு அலங்காரப் பொருட்கள், துளசியில் செய்யப்பட்ட அணிகலன்கள், லெதர் பேக்குகள், மரத்தில் செதுக்கப்பட்ட மரப்பொருட்கள், கைத்தறி பொருட்கள் என ஏராளமானவை வைத்து கண்காட்சி நடைபெற்றது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த கண்காட்சியானது டிசம்பர் 29-ம் தேதி தொடங்கப்பட்டு ஜனவரி 7-ம் தேதி வரை நடைபெற்றது. வியாபாரம் நன்றாக இருந்ததாகவும், நினைத்த அளவிற்கு வியாபாரம் இல்லை என்றும் மக்களின் வரவேற்பு குறைவு என்றும் கூறினர்.

First published:

Tags: Local News, Ramanathapuram, Rameshwaram