ஹோம் /ராமநாதபுரம் /

நாள் முழுவதும் அன்னதானம் திட்டம்.. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவில் தொடக்கம்..

நாள் முழுவதும் அன்னதானம் திட்டம்.. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவில் தொடக்கம்..

X
ராமேஸ்வரம்

ராமேஸ்வரம் கோயில்

Rameshwaram Temple : ராமநாதசுவாமி திருக்கோவில் பக்தர்கள் வசதிக்காக நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் தொடக்கம் தமிழக முதலமைச்சர் காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலானது பன்னிரண்டு ஜோதிடர் லிங்கங்களில் ஒன்றாகவும், உலக பிரசித்தி பெற்றதாகும், காசிக்கு அடுத்தப்படியான புண்ணிய ஸ்தலமாகவும் விளங்கி வருகிறது.

இந்நிலையில், இன்று தமிழக முதலமைச்சர் தலைமை செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக மதுரை, திருவண்ணாமலை திருக்கோவில்களைத் தொடர்ந்து ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியானது திருக்கோவிலின் தெற்கு கோபுரத்தில் உள்ள திருக்கல்யாணம் மண்டபம் வளாகத்தில் நடைபெற்றது. காணொளி காட்சி நிகழ்ச்சியில் மாவட்டம் ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ், கோவில் நிர்வாகம் அலுவலர்கள், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு அன்னதானம் திட்டத்தை துவக்கி வைத்தனர்‌.

இதையும் படிங்க : ராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுலா பயணிகள் மிஸ் பண்ணக்கூடாத தனுஷ்கோடி... ஏன் தெரியுமா?

இதனைத்தொடர்ந்து, இன்று தரிசனம் செய்ய வந்த நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் அன்னதானத்தில் கலந்துகொண்டனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

செய்தியாளர் : மனோஜ்குமார் - ராமநாதபுரம்

First published:

Tags: Local News, Ramanathapuram