முகப்பு /ராமநாதபுரம் /

ராமேஸ்வரத்தில் தமிழக அரசைக் கண்டித்து அ.தி.மு.க சார்பில் கண்டன ஆர்பாட்டம்

ராமேஸ்வரத்தில் தமிழக அரசைக் கண்டித்து அ.தி.மு.க சார்பில் கண்டன ஆர்பாட்டம்

X
அதிமுக

அதிமுக போராட்டம்

Ramanathapuram | ராமேஸ்வரத்தில் தமிழக அரசைக் கண்டித்து அ.தி.மு.க சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

  • Local18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Rameswaram, India

ராமேஸ்வரம் பேருந்து நிலையம் எதிரே, ஆளுங்கட்சியால்  கொண்டுவரப்பட்டுள்ள மின் கட்டண உயர்வு மற்றும் சொத்து வரி உயர்வை கண்டித்து  ராமேஸ்வரம் நகர் அதிமுகவினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு முழுக்க சொத்து வரி மற்றும்  மின் கட்டண உயர்வை கண்டித்து தமிழக முழுவதும் உள்ள நகராட்சிகளில் ஆளும்கட்சிக்கு எதிராக இன்று கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது.

அதிமுக போராட்டம் 

இதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் நகர் அதிமுகவினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மற்றும் கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டு ஆளும்கட்சிக்கு எதிராக  கண்டன முழக்கங்களை எழுப்பி எழுப்பினர்.

அதிமுக போராட்டம்

கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக ஆட்சி அமைத்து 18 மாதங்கள் ஆகியும்  எந்தவித நல திட்டங்களும்  பொதுமக்களுக்கு சென்று சேரவில்லை என்றும், நகர்மன்ற உறுப்பினர்கள் பதவியேற்று ஒரு ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில் சாலைகள் கூட சரிசெய்யவில்லை என்றும், மின்விளக்குகள் கூட முறையாக எரியவில்லை என்றும் கூறினர்.

ராமேஸ்வரம் நகராட்சியில் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பாதாள சாக்கடை திட்டம் நிறைவேறாமல் கிடப்பில் இருப்பதால் சாலைகள் தோண்டப்பட்டு சேதமடைந்து இருப்பதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர் என்றும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

போதைப்பொருள் கடத்தல் நகரமாக வேதாளை மாறிவிட்டது என்றும் குற்றம்சாட்டினர். அதனைக் கண்டித்தும் அதிமுகவினர் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

First published:

Tags: Local News, Ramanathapuram