முகப்பு /ராமநாதபுரம் /

அண்ணா பிறந்தநாள்: ராமேஸ்வரம் கோவிலில் பொதுவிருந்து- வாக்குவாதமானதால் அ.தி.மு.க புறக்கணிப்பு

அண்ணா பிறந்தநாள்: ராமேஸ்வரம் கோவிலில் பொதுவிருந்து- வாக்குவாதமானதால் அ.தி.மு.க புறக்கணிப்பு

X
வாக்குவாதத்தில்

வாக்குவாதத்தில் அ.தி.மு.கவினர்

Ramanathapuram | ராமேஸ்வரம் கோவிலில் நடைபெற்ற பொதுவிருந்தில் அ.தி.மு.கவினருக்கும் கோவில் ஊழியர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதசுவாமி திருக்கோவிலில் பொதுவிருந்தில் அதிமுகவினரை அவமதிக்கும் விதமாக பேசிய கோவில் ஊழியரை கண்டித்து அதிமுக கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பொது விருந்தில் கலந்து கொள்ளாமல் வெளிநடப்பு செய்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோவிலில் பேரறிஞர் அண்ணாவின் 54-வது நினைவு தினத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்று, திருக்கோவில் நிர்வாகத்தின் சார்பில் கோவில் திருக்கல்யாண மண்டபத்தில் பொது விருந்து நடைபெற்றது.

இந்த பொது விருந்தில் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், திமுக கவுன்சிலர்கள், அதிமுக கவுன்சிலர்கள், பிரதான கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், பொது விருந்தில் கலந்து கொண்ட அதிமுக கவுன்சிலர்கள் உணவு அருந்த வரிசையில் அமர்ந்த போது முதலில் திமுகவினர் அமர்ந்து சாப்பிட வேண்டும் எனவும், அதிமுகவினர் பிறகு சாப்பிடுங்கள் என்று அதிமுகவினரிடம் திருக்கோவில் ஊழியர்கள் கூறியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, ஆத்திரமடைந்த அதிமுக கவுன்சிலர்கள் திருக்கோவில் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பொது விருந்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்து அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இதனால் பொது விருந்து நடைபெற்ற திருக்கல்யாண மண்டபத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

First published:

Tags: Local News, Ramanathapuram