ராமநாதபுரம் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் அலுவலகத்தில் “தரமான விதை உற்பத்தியாளர்”என்ற தலைப்பில் 20 பேருக்கு 30 நாட்களுக்கு இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது.
இதில், 18 முதல் 40 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலரும் பங்கேற்கலாம் என்றும், அவர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பயிற்சி பெற்றவர்களுக்கு மீண்டும் அனுமதி இல்லை என்றும், பயிற்சிக்கு பிறகு பயணப்படி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : பசும்பொன் தேவர் நினைவிட பொறுப்பாளர்களிடம் எடப்பாடி அணி சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சுவார்த்தை
இந்த பயிற்சியில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தக முதல் பக்க நகல்கள் மற்றும் கல்வி தகுதிக்கான சான்றிதழ் ஆகியவற்றுடன் வட்டார வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
மேலும் கூடுதல் விவரங்களுக்கு ராமநாதபுரம் வேளாண் இணை இயக்குனர் அலுவலகத்தை- 8248980944 என்ற அலைபேசியிலும், பரமக்குடி உழவர் பயிற்சி நிலையத்தை - 97884 92372 என்ற அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று ராமநாதபுரம் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் கண்ணையா தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Ramanathapuram