Home /ramanathapuram /

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலில் ஆடித் திருக்கல்யாணம்: கொடியேற்றத்துடன் தொடக்கம்

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலில் ஆடித் திருக்கல்யாணம்: கொடியேற்றத்துடன் தொடக்கம்

ராமநாதசுவாமி

ராமநாதசுவாமி கோவில் திருக்கல்யாணம்

ராமேஸ்வரம் அருள்மிகு ராமநாதசுவாமி  பர்வதவர்த்தினி அம்மன் திருக்கோவிலில் ஆடித்திருக்கல்யாண விழா இன்று கொடியேற்றத்துடன் சிறப்பாக தொடங்கியது.

ராமேஸ்வரம் அருள்மிகு ராமநாதசுவாமி பர்வதவர்த்தினி அம்மன் திருக்கோவிலில் ஆடித்திருக்கல்யாண விழா இன்று கொடியேற்றத்துடன் சிறப்பாக தொடங்கியது. உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் திருக்கோவிலில் ஆடித் திருக்கல்யாணம், மாசி சிவராத்திரி முக்கிய திருவிழாவாக கொண்டாடப்பட்டுகிறது. இதில் ஆடித்திருக்கல்யாண நிகழ்வானது மிகவும் சிறப்பு வாய்ந்தது.

இந்நிலையில், நேற்று காலை பர்வதவர்த்தினி அம்மன் சன்னதியில் எதிரே உள்ள தங்க கொடிமரத்தில் கோவில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க கன்னியலக்கனத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. பின்னர் சுவாமிக்கும் அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது.

ஆடித் திருக்கல்யாண நிகழ்ச்சியானது 17 நாட்கள் தொடர்ந்து நடைபெறும். ஆடித்திருவிழா நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வட மாநிலங்களிலிருந்தும் பல ஆயிரக்கணக்காண பக்தர்கள் ராமேஸ்வரத்தில் தங்குவர்

ஆடி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான திருக்கல்யாண உற்சவம் வரும் 3ந் தேதி நடைபெறுகிறது. அதை தொடர்ந்து ஜுலை 28 ஆடி அமாவாசை, ஜுலை 31 தேரோட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

மேலும், ஆடி திருக்கல்யாண திருவிழாவில் 1ம் நாள் திருநாள் முதல் 10ம் நாள் வரையிலும் சுவாமி புறப்பாடு ராமநாதசுவாமி கோவிலின் நான்கு ரதவீதிகளில் வீதி உலா காலை,‌ மாலை வேளைகளில் வெவ்வேறு தோற்றத்தில் நடைபெறும். இந்நிகழ்ச்சியில் உள்ளூர் மற்றும் வெளி மாநில பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Published by:Karthick S
First published:

Tags: Local News, Ramanathapuram

அடுத்த செய்தி