முகப்பு /ராமநாதபுரம் /

ராமேஸ்வரம் அச்சமுனீஸ்வரர் ஆலய பூக்குழி விழா.. பக்தி பரவசத்துடன் பூக்குழி இறங்கிய பக்தர்கள்!

ராமேஸ்வரம் அச்சமுனீஸ்வரர் ஆலய பூக்குழி விழா.. பக்தி பரவசத்துடன் பூக்குழி இறங்கிய பக்தர்கள்!

X
ராமேஸ்வரம்

ராமேஸ்வரம் அச்சமுனீஸ்வரர் ஆலய பூக்குழி விழா

Ramanathapuram District | ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை அடுத்த கரையூர் கடற்கரை அச்சமுனீஸ்வரர் கோவில் பூக்குழி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த கரையூர் கடற்கரை அச்சமுனீஸ்வரர் கோவில் பூக்குழி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பூக்குழி இறங்கி நேர்த்திகடன் செலுத்தினர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் கரையூர் கடற்கரை பகுதியில் அமைந்துள்ளது பழமையான அச்சமுனீஸ்வரர் கோவில். இந்த கோவிலில் பூக்குழி திருவிழாவானது ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது, அச்சுமுனீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கோவில் முன்பு மரக்கட்டைகளை அடுக்கி தீயிட்டு எரித்து கங்குகள் பரப்பி வைக்கப்பட்டன.

அப்போது, நேர்த்திக்கடன் செலுத்த வந்த 50-க்கும் அதிகமான பக்தர்கள் அச்சு முனீஸ்வரர் கோவிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு வந்து, ராமநாதசுவாமி திருக்கோவில் அக்னி தீர்த்தம் கடலில் நீராடி விட்டு, பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக கரையூர் கடற்கரை அச்சமுனீஸ்வரர் கோவிலுக்கு வந்தனர். அதனைத் தொடர்ந்து பக்தி பரவசத்துடன் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்த பூக்குழி விழாவில் ஏராளமான பக்தர்களும், பொதுமக்களும் கலந்துகொண்டு அச்ச முனீஸ்வரரை வணங்கி வழிபட்டு தரிசனம் செய்தனர்.

First published:

Tags: Local News, Ramanathapuram