ஹோம் /ராமநாதபுரம் /

அப்துல் கலாம் பிறந்தநாளை 17 ஆண்டுகளாக வாசிப்பு தினமாக கொண்டாடும் அரசு பள்ளி..

அப்துல் கலாம் பிறந்தநாளை 17 ஆண்டுகளாக வாசிப்பு தினமாக கொண்டாடும் அரசு பள்ளி..

அரசு பள்ளி மாணவர்கள்

அரசு பள்ளி மாணவர்கள்

Dr APJ Abdul Kalam | அப்துல் கலாமின் பிறந்த நாளையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்கள் வாசிப்பு தினமாக கடந்த 2006 ஆண்டு முதல் தொடர்ந்து 17 வருடங்களாக கொண்டாடி வருகின்றனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Ramanathapuram, India

  முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பிறந்தநாளை விழாவை வாசிப்பு தினமாக கொண்டாடிய ராமேஸ்வரம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள்.

  இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி டாக்டர். ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் 91-வது பிறந்த நாளை ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அரசு மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் வாசிப்பு தினமாக கொண்டாடப்பட்டது.

  மிகவும் பின்தங்கிய பகுதியாக இருந்த ராமேஸ்வரத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்துதவர். தனது அறிவாற்றலால் இந்தியாவின் குடியரசு தலைவராக உயர்ந்தவர் அப்துல்கலாம். கல்வியும், வாசிப்பும் ஒருவரை சிகரத்திற்கு இட்டுச்செல்லும் என அவர் மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் எடுத்துச்சொல்லி தங்களது வாழ்க்கையில் முன்னேற வழிகாட்டியாக இருந்தவர்.

  1931 அக்டோபர் 15-ல் பிறந்த அப்துல் கலாம் , விஞ்ஞானியாக உயர்ந்தார். மாணவர்கள், இளைஞர்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்தார்.

  இந்தியாவின் 11வது ஜனாதிபதியாக பொறுப்பேற்ற அவர், தனது எளிமையால் மக்கள் ஜனாதிபதி என்றழைக்கப்பட்டார். அக்னி நாயனாக அவரை திறமையை பாராட்டி நாட்டின் உயர் விருதான பாரத ரத்னா வழங்கப்பட்டது.

  அப்துல் கலாமின் பிறந்த நாளையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்கள் வாசிப்பு தினமாக கடந்த 2006 ஆண்டு முதல் தொடர்ந்து 17 வருடங்களாக கொண்டாடி வருகின்றனர். இதையடுத்து இன்று பள்ளி வளாகத்தில் வாசிப்பு தினமாக கொண்டாடப்பட்டது.

  இந்த ஆண்டு பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் தலைமை வகித்தார். நுகர்வோர் இயக்க துணைத்தலைவர் தில்லைபாக்கியம் புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

  விழாவில், தேசிய மாணவர்படை அலுவலர் பழனிச்சாமி, ரெட் கிராஸ் ஆசிரியர் தினகரன் ஆகியோர் பங்கேற்றனர். நாட்டு நலப்பணித்திட்ட மாவட்ட தொடர்பு அலுவலர் ஜெயகாந்தன் நன்றி கூறி நிறைவுப் பெற்றது.

  Published by:Suresh V
  First published:

  Tags: APJ Abdul Kalam, Govt School, Local News, Rameshwaram