ஹோம் /ராமநாதபுரம் /

அப்துல் கலாமின் 91வது பிறந்த நாள் - குடும்பத்தினர், பொதுமக்கள் மரியாதை

அப்துல் கலாமின் 91வது பிறந்த நாள் - குடும்பத்தினர், பொதுமக்கள் மரியாதை

அப்துல் கலாம் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகின்றனர்

அப்துல் கலாம் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகின்றனர்

Abdul Kalam's 91st Birthday | முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் 91வது பிறந்தநாளையொட்டி ராமநாதபுரம் பாம்பன் அடுத்த பேக்கரும்பில் அமைக்கப்பட்டுள்ள தேசிய நினைவகத்தில் அப்துல் கலாமின் குடும்பத்தினர், நடிகர் தாமு, பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மரியாதை செலுத்தினர்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் 91வது பிறந்தநாளையொட்டி ராமநாதபுரம் பாம்பன் அடுத்த பேக்கரும்பில் அமைக்கப்பட்டுள்ள தேசிய நினைவகத்தில் அப்துல் கலாமின் குடும்பத்தினர், நடிகர் தாமு, பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மரியாதை செலுத்தினர்.

ராமேஸ்வரத்தில் 1931 அக்.15ல் பிறந்த அப்துல் கலாம், விஞ்ஞானியாக உயர்ந்தார். அக்னி நாயனாக அவரை திறமையை பாராட்டி நாட்டின் உயர் விருதான பாரத ரத்னா வழங்கப்பட்டது.

இந்தியாவின் 11வது ஜனாதிபதியாக பொறுப்பேற்ற அப்துல் கலாம் தனது எளிமையால் மக்கள் ஜனாதிபதி என்றழைக்கப்பட்டார். மாணவர்கள், இளைஞர்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்தார்.

இதையும் படிங்க : ராணுவ கல்லூரியில் சேர விருப்பமா? -  ராமநாதபுரம் கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

இந்நிலையில், 2015 ஜூலை 27ல் கலாம் மறைந்தார். அவரது உடலானது அவரது சொந்த ஊரான ராமேஸ்வரம் அருகே பேய்க்கரும்பு பகுதியில் இந்திய அரசால் உடல்‌ அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

அப்துல்கலாம் நினைவிடத்தில் மத்திய அரசின் பாதுகாப்பு, ஆராய்ச்சி மேம்பாட்டு துறையின் சார்பில் மணிமண்டபம் கட்டப்பட்டு 2017 ஜூலை 27ல் திறக்கப்பட்டது.

இந்நிலையில், அப்துல்கலாமின் 91வது பிறந்தநாளையொட்டி அவரது குடும்ப உறுப்பினர்கள் காலை 9 மணி அளவில் நினைவகத்ததில் சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதனைத்தொடர்ந்து திரைப்பட நடிகர் தாமு, மாவட்ட நிர்வாகம், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கலாமின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Ramanathapuram