ஹோம் /ராமநாதபுரம் /

பரமக்குடி வைகை ஆற்றில் குளித்து கொண்டிருந்த இளைஞர் வலிப்பு ஏற்பட்டு மூழ்கி பலி

பரமக்குடி வைகை ஆற்றில் குளித்து கொண்டிருந்த இளைஞர் வலிப்பு ஏற்பட்டு மூழ்கி பலி

X
வைகை

வைகை ஆற்றில் குளித்து கொண்டிருந்த இளைஞர் வலிப்பு ஏற்பட்டு மூழ்கி பலி

Ramanathapuram vaigai River | தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட விஜயை ஒரு மணி நேரம் தேடுதலுக்கு பிறகு சடலமாக தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

பரமக்குடி வைகை ஆற்றில் நண்பருடன் குளித்தவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு நீரில் மூழ்கி பரிதாபமாக மூழ்கி  உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி காந்தி காலனியை சேர்ந்தவர் விஜி என்ற விஜய்(28) இவர் டிரம் செட் அடிக்கும் வேலை செய்து வருகிறார். வைகை ஆற்றில் நண்பர்களுடன்  குளித்துக் கொண்டிருந்த போது  திடீரென ஏற்பட்ட வலிப்பு நோயால் மயங்கி விழுந்ததில் தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதையடுத்து, நீரில் அடித்துச் செல்லப்பட்ட விஜயை நண்பர்கள் நீண்ட நேர்ம தேடியும் கிடைக்கவில்லை, இதனால் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்து உறவினர்கள் தேடத் தொடங்கி உள்ளனர். நீண்ட நேரம் உறவினர்கள் தேடியும் கிடைக்கவில்லை, அங்கு விரைந்து வந்த பரமக்குடி தீயணைப்பு துறை வீரர்கள் வைகையாற்றில் விஜயை தேடினர். பின்னர் ஒரு மணி நேரத்திற்கு பிறகு விஜயை சடலமாக மீட்டனர். இச்சம்பவம் குறித்து பரமக்குடி டவுன் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

First published:

Tags: Local News, Ramanathapuram