ஹோம் /ராமநாதபுரம் /

காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து பயணிகளுடன் புறப்பட்ட ரயில் 

காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து பயணிகளுடன் புறப்பட்ட ரயில் 

ரயில்

ரயில்

Ramanathapuram News : காசியில் நடைபெறும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு ராமேஸ்வரம் – வாரணாசி ரயிலில் கூடுதல் பெட்டிகளுடன் ராமேஸ்வரத்தில் இருந்து மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பயணிகளுடன் ரயில் வாரணாசிக்கு புறப்பட்டது. 

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

காசியில் நடைபெறும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு ராமேஸ்வரம் – வாரணாசி ரயிலில் கூடுதல் பெட்டிகளுடன் ராமேஸ்வரத்தில் இருந்து மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பயணிகளுடன் ரயில் வாரணாசிக்கு புறப்பட்டது.

தமிழகம் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலம் காசிக்கும் இடையே இருந்த கலாச்சார தொடர்புகளை மீட்டெடுக்கும் வகையில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியானது நவம்பர் 16ம் தேதி முதல் டிசம்பர் 19ம் தேதி வரை காசியில் நடைபெறுகிறது.

இந்த தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில், இலக்கியம், பழங்கால நூல்கள், தத்துவம், ஆன்மீகம், இசை நடனம், நாடகம், யோகா, மற்றும் நவீன கண்டுபிடிப்புகள் வர்த்தகம் போன்ற பல்வேறு அம்சங்களை பற்றிய கருத்தரங்குகள், விவாதங்கள், விரிவுரைகள் மற்றும் தமிழ்நாட்டின் கலை, கலாச்சாரம், உணவு வகைகள், கைத்தறி கைவினை பொருட்கள் ஆகியவை அடங்கிய பொருட்காட்சி உள்ளிட்டவை இந்த சங்கமத்தில் நடைபெற்று வருகிறது.

மேலும், பரதநாட்டியம், கர்நாடக இசை தமிழ் இசை, தமிழ் நாட்டுப்புற இசை, நாதஸ்வர கச்சேரி, தேவாரம் போன்ற கலாச்சார நிகழ்ச்சிகளும் தமிழிசை வடிவில் திருவாசகம், கம்பராமாயண உரை, தமிழரின் பாரம்பரிய நடனங்கள் போன்றவை காசியில் உள்ள மக்கள் ரசிப்பதற்காக அரங்கேற்றப்பட இருக்கின்றன.

இதையும் படிங்க : ராமநாதபுரத்தில் வலையில் சிக்கிய 3 டன் எடையுள்ள திமிங்கலம்- மீண்டும் கடலில் விட்ட மீனவர்கள்

இதன் மூலம் காசி, ராமேஸ்வரம் என்ற இரண்டு வரலாற்று ஒற்றுமையை புரிந்து கொள்ள இது ஒரு சிறந்த தளமாக இருக்கும் என்று மாணவர்கள் கூறினர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தமிழகத்தில் இருந்து மாணவர்கள், ஆசிரியர்கள், இலக்கியவாதிகள், உள்ளிட்ட பல துறைகளை சேர்ந்தவர்கள் சங்கமத்தில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

இதற்காக தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் இருந்து கலைஞர்கள் காசிக்கு செல்ல உள்ளதால் அவர்களது வசதிக்காக நவம்பர் 16, 23, 30 டிசம்பர் 7 மற்றும் 14 ஆகிய நாட்களில் ராமேஸ்வரம் - பனாரஸ் விரைவு ரயிலில் கூடுதலாக 3 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது.

இதன் ஒருபகுதியாக ராமேஸ்வரத்தில் இருந்து காசி செல்லும் வாரணாசி விரைவு ரயில் ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் இருந்து காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இரவு 11:50 மணி அளவில் பயணிகளுடன் புறப்பட்டது.

இதையும் படிங்க : ராமேஸ்வரம் கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களில் நீராடினால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா?

இந்நிகழ்ச்சியில் சுமார் 2,500 பேர் கலந்து கொள்ள உள்ளனர், ஒவ்வொரு குழுவிலும் சுமார் 210 பேராக 12 குழுக்களாக பிரித்து ரயில்கள் மூலமாக வாரணாசிக்கு அழைத்து செல்ல உள்ளனர்.

இதனை முன்னாள் சாலை மற்றும் கப்பல்துறை மத்திய அமைச்சர் பொன் ராதா கிருஷ்ணன் அவர்கள் பயணிகள் மற்றும் மாணவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்து பின்னர் அவர்களுடன் ரயிலில் அவரும் பயணித்து சென்றார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Published by:Karthi K
First published:

Tags: Local News, Ramnad