ஹோம் /ராமநாதபுரம் /

ராமேஸ்வரத்தில் சடலமாக மிதந்த சுற்றுலா பயணி.. டூர் குரூப்பில் இருந்து மிஸ் ஆனதாக தகவல்!

ராமேஸ்வரத்தில் சடலமாக மிதந்த சுற்றுலா பயணி.. டூர் குரூப்பில் இருந்து மிஸ் ஆனதாக தகவல்!

சடலமாக மீட்கப்பட்ட நபர்

சடலமாக மீட்கப்பட்ட நபர்

Rameswaram | ராமேஸ்வரத்தில் குழுவாக சுற்றுலா வந்தவர்களில் இவர் காணாமல் போனதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Rameswaram | Ramanathapuram

ராமேஸ்வரம் வந்த கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலா பயணி,மெய்யம்புளி அருகே உள்ள குளத்தில் இறந்த நிலையில் சடலமாக மீட்க்ப்பட்டார்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்திற்கு கர்நாடகம் மாநிலத்தில் இருந்து குழுவாக சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். இந்த குழுவில் இருந்து எஸ்.சித்தராம ஷெட்டி என்பவர் காணாமல் போனதாக அவரது குழுவினர்கள் ராமேஸ்வரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதனையடுத்து,காவல்துறையினர் தேடி வந்துள்ளனர்.

இந்நிலையில் இன்று அதிகாலையில் ராமேஸ்வரத்திற்கும் தங்கச்சிமடத்திற்கும் இடையே உள்ள மெய்யம்புளி எனும் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள குளத்தில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கிடப்பதாக அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்துள்ளனர்.

இதையடுத்து, அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சடலத்தினை மீட்டு விசாரணை செய்ததில் கர்நாடகம் மாநிலத்தில் உள்ள ஹோபாலி சன்னபட்னா சேர்ந்த எஸ்.சித்தராமஷெட்டி என்றும் அவர் குழுவாக சுற்றுலா வந்ததும், குழுவில் இருந்து காணாமல் போனதாக காவல்நிலையத்தில் புகார் அளித்ததும் நேற்று இறந்ததாகவும் தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, இவர் எவ்வாறு குழுவில் இருந்து பிரிந்தார் என்றும், ராமேஸ்வரத்தில் இருந்து ஜந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இப்பகுதிக்கு எவ்வாறு வந்து இங்கு இறந்துள்ளார் என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Dead body, Local News, Ramanathapuram, Rameshwaram, Ramnad