ஹோம் /ராமநாதபுரம் /

திருஉத்திரகோசமங்கை ஸ்ரீ மரகத சிலை நடராஜர் கோவில் ஆரூத்ரா தரிசன விழா ஏற்பாடுகள் தீவிரம்..

திருஉத்திரகோசமங்கை ஸ்ரீ மரகத சிலை நடராஜர் கோவில் ஆரூத்ரா தரிசன விழா ஏற்பாடுகள் தீவிரம்..

X
ஆருத்ரா

ஆருத்ரா தரிசனம் திருவிழா பக்தர்கள் பாதுகாப்பு குறித்து உத்திரகோசமங்கையில் ஆய்வு

திருஉத்திரகோசமங்கை ஸ்ரீ மரகத சிலை நடராஜர் கோவில் ஆரூத்ரா தரிசனவிழா  நடைபெறுவதை முன்னிட்டு  பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தீவிரம்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

திருஉத்திரகோசமங்கை ஸ்ரீ மரகத சிலை நடராஜர் கோவில் ஆரூத்ரா தரிசனவிழா நடைபெறுவதை முன்னிட்டு பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

உலகின் முதல் சிவத்தலம் என அழைக்கப்படும் ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்திரகோசமங்கை ஸ்ரீ மங்களநாதர் கோவிலில் ஒரே கல்லிலால் ஆன 5 அடி உயரமுள்ள நடராஜருக்கு மரகதச் சிலை உள்ளது. இந்நிலையில், மரகத நடராஜர் சிலை திருவாதிரை அன்று சந்தனக்காப்பால் பூசப்பட்டு பக்தர்களுக்கு காட்சி தரும் இந்த சந்தனக்காப்பு ஆரூத்ர தரிசன விழாவின் நாளை 32 வகையான அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.

இந்நிலையில், நாளை மறுநாள் அதிகாலை திருவாதிரை தினத்தன்று அருணோதய நேரத்தில் மீண்டும் சந்தனக் காப்பிடப்பட்டு சிறப்பு தீப ஆராதனைகளுடன் நடைசாத்தப்படும், இதனை காண தமிழகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

இதையடுத்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்ய உள்ளதால் விழா முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்புகள் குறிந்து மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ், மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தங்கதுரை உள்ளிட்டோர் உத்திரகோசமங்கையில் ஆய்வு செய்தனர்.

First published:

Tags: Local News, Ramanathapuram, Tamil News