Home /ramanathapuram /

ராமேஸ்வரம் - ஹூப்ளி இடையே வாராந்திர சிறப்பு ரயில்- நாளை முதல் தொடக்கம்

ராமேஸ்வரம் - ஹூப்ளி இடையே வாராந்திர சிறப்பு ரயில்- நாளை முதல் தொடக்கம்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டி, 3 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 9 இரண்டாம் வகுப்பு  படுக்கை வசதி பெட்டிகள், 5 இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்படும்.

மேலும் படிக்கவும் ...
    ஹூப்ளி - ராமேஸ்வரம் ரயில் நிலையங்களுக்கு இடையே வாராந்திர சிறப்பு ரயிலை இயக்க தென்மேற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

    இதன்படி ஹூப்ளி - ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு கட்டண ரயில் (07353) ஹூப்ளியில் இருந்து ஆகஸ்ட் 6 முதல் செப்டம்பர் 24 வரை சனிக்கிழமைகளில் காலை 06.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 06.15 மணிக்கு ராமேஸ்வரம் வந்து சேரும்.

    மறுமார்க்கத்தில் ராமேஸ்வரம் - ஹூப்ளி வாராந்திர சிறப்பு கட்டண ரயில் (07354) ராமேஸ்வரத்தில் இருந்து ஆகஸ்ட் 7 முதல் செப்டம்பர் 25 வரை ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 09.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 07.25 மணிக்கு ஹூப்ளி சென்று சேரும்.

    இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டி, 3 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 9 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 5 இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்படும்.

    இந்த ரயில்கள் ஹவேரி, ராணி பென்னுரு, ஹரிஹார், தேவனஹரி, சிக் ஜாஜுர், பிரூர் அரிசிகரே, தும்கூர், யெஸ்வந்த்பூர் (பெங்களூர்), பனஸ்வாடி, ஓசூர், தர்மபுரி, ஓமலூர், சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை, ராமநாதபுரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களுக்கான பயண சீட்டு முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Ramanathapuram

    அடுத்த செய்தி