முகப்பு /ராமநாதபுரம் /

பரமகுடியில் சீமான் உருவ பொம்மையை எரிக்க முயற்சி- காவல்துறையினருடன் தள்ளுமுள்ளு

பரமகுடியில் சீமான் உருவ பொம்மையை எரிக்க முயற்சி- காவல்துறையினருடன் தள்ளுமுள்ளு

X
போராட்டத்தில்

போராட்டத்தில் தமிழ்ப் புலிகள் கட்சியினர்

Ramanathapuram | ராமநாதபுரம் மாவட்டம் பரமகுடியில் சீமானுக்கு எதிராக தமிழ்ப் புலிகள் அமைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Ramanathapuram, India

பரமக்குடி தாலுகா ஐந்துமுனைப் பகுதியில் சீமானின் உருவ பொம்மையை எரிக்க முயன்ற தமிழ் புலிகள் கட்சியினருக்கும், காவல்துறையினருக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அக்கட்சியைச் சேர்ந்த 10 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர், ‘அருந்ததியர் இன மக்கள் வந்தேறி என்று பேசியிருந்தார். சீமானின் இந்த கருத்துக்கு தமிழ்நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் அருந்ததியினர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஐந்து முனைப் பகுதியில் சீமானின் பேச்சைக் கண்டித்து தமிழ் புலிகள் கட்சி சார்பில் சீமானின் உருவ பொம்மையை எரிக்க முயற்சித்ததால் காவல்துறையினருக்கும், அக்கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

ராமேஸ்வரத்தில் மண்ணெண்ணெய் முறையாக வழங்குவதில்லை - குமுறும் மக்கள்

இதையடுத்து, தமிழ் புலிகள் கட்சியினர் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டம் செய்ததால்‌ அக்கட்சியை சேர்ந்த 10 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

First published:

Tags: Local News, Ramanathapuram