ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் புலித்தேவன் நகரைச் சேர்ந்த அரசகுமார் என்பவர் தனுஷ்கோடி அருகே நாட்டுப்படகில் மீன்பிடித்து கொண்டிருக்கும் போது காலில் டேப் கட்டிய ஹோமர் வகை புறா ஒன்று படகில் வந்து நின்றுள்ளது. இந்த புறாவினை பிடித்து கரைக்கு வந்து ராமேஸ்வரம் துறைமுக காவல்நிலையத்தில் ஒப்படைத்தார். புறாவின் காலில் இருந்த டேப்பில் சுதன் என்று பெயர் எழுதி அதில் அவரின் தொலைபேசி எண் இருந்தது.
இந்நிலையில், அந்த தொலைபேசி எண்ணிற்கு காவல்துறையினர் தொடர்பு கொண்டு பேசியதில் புறாவானது தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் அருகே வல்வெட்டித்துறையில் புறா பந்தயம் நடைபெற்றதாகவும் அதில் பறக்கவிட்டபோது காணாமல் போய்விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த புறாவானது ஹோமர் இனத்தை சேர்ந்த பந்தய புறாவாகும், தொடர்ந்து 300 கிலோமீட்டர் வரை பறக்கக்கூடிய தன்மை உடையது எனவும் காற்றின் வேகம் காரணமாக திசைமாறி தனுஷ்கோடி வரை பறந்து வந்து இளைப்பாற மீனவர் படகிற்கு வந்திருக்கும் என்று காவல்துறையினர் கூறுகின்றனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
துறைமுக காவல்நிலையம் அருகே ரகு என்பவர் வீட்டில் புறாக்கள் வளர்த்து வருகிறார். அவரது புறாக்களுடன் இந்த புறாவை வளர்க்கும்படி காவல்துறையினர் புறாவை ரகுவிடம் ஒப்படைத்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Ramanathapuram