முகப்பு /ராமநாதபுரம் /

மலேசியாவில் கணவர் மரணம்.. "அடக்கம் செய்து சான்றிதழ் வழங்குங்கள்" ராமநாதபுரம் கலெக்டரிடம் மனைவி கோரிக்கை!

மலேசியாவில் கணவர் மரணம்.. "அடக்கம் செய்து சான்றிதழ் வழங்குங்கள்" ராமநாதபுரம் கலெக்டரிடம் மனைவி கோரிக்கை!

X
மனு

மனு அளித்த பெண்

Ramanathapuram | சத்திரக்குடி அருகே சேமனூர் கிராமத்தில் இருந்து மலேசியாவிற்கு வேலைக்கு சென்ற தன் கணவர் திடீரென மரணமடைந்ததால் உடலை அங்கேயே அடக்கம் செய்துவிட்டு, அதற்கான சான்றிதழை பெற்றுத்தர மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே சேமனூர் கிராமத்தில் இருந்து மலேசியாவிற்கு வேலைக்கு சென்ற தன் கணவர் திடீரென்று மரணம் அடைந்ததால் உடலை அங்கேயே அடக்கம் செய்துவிட்டு, அதற்கான சான்றிதழை பெற்றுத்தர மாவட்ட ஆட்சியரிடம் அவரது மனைவி கோரிக்கை விடுத்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே உள்ள சேமனூர் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு மலேசியாவிற்கு வேலைக்காக சென்று ஒரு தனியார் எஸ்டேட்டில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 19-ம் தேதி அன்று அவர் உயிரிழந்ததாகவும் அவரது உடல் அங்குள்ள மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மலேசியாவில் உடன்  பணியாற்றியவர்கள் அங்கிருந்து தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, வெங்கடேசனின் மனைவி முனீஸ்வரி ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து அன்றாடம் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வரும் என்னால் பணம் செலவு செய்து மலேசியாவில் இருந்து கணவர் உடலை கொண்டுவர முடியாது, கணவரின் உடலை மலேசியாவிலே அடக்கம் செய்து விட்டு அதற்கான சான்றிதழை பெற்றுத் தரவேண்டும் என்றார். மேலும், தனக்கும் தன் குழந்தைகள் வாழ்வாதாரத்திற்கும்‌ படிப்பிற்கும் ஏதாவது வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீருடன் கோரிக்கை விடுத்தார்.

First published:

Tags: Death, Local News, Ramanathapuram