மைசூரைச் சேர்ந்த பொறியாளர் தாயின் ஆசையை நிறைவேற்ற தாயுடன் சேர்ந்து இரு சக்கர வாகனத்தில் 61,198 கி.மீ தூரம்புனித யாத்திரை பயணம் மேற்கொண்டுள்ளார்.
கர்நாடக மாநிலம் மைசூரைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். இவருக்கு வயது 44.தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் தாயார் பெயர் ரத்னம்மா. அவருக்கு வயது 70.
திருமணம் செய்துகொள்ளாத கிருஷ்ண குமார், தந்தை, தாயுடன் இணைந்து வாழ்ந்து வந்துள்ளார். இவரின் தந்தை 2015- ம் ஆண்டு இயற்கை மரணம் எய்துள்ளார். இதன் பிறகு கிருஷ்ணகுமார்,தினமும் இரவு உணவு சாப்பிட்டு விட்டு அம்மாவுடன் சந்தோஷமாக பேசி கொண்டு இருப்பதைவழக்கமாக வைத்துள்ளார்.
அப்போது அவரின் அம்மாவிடம் திருப்பதி, திருவனந்தபுரம், போன்ற சில கோயில்களின் பெயர்களை கூறி இந்த கோயில்களுக்கெல்லாம் சென்று இருக்கிறீர்களா என்று கேட்டுள்ளார். அதற்கு அவரின் அம்மா இல்லை என்று கூறி உன்னையையும், அப்பாவையும் பாத்து கொண்டு வீட்டில் உள்ள வேலையை பார்ப்பதற்கு நேரம் சரியாக இருந்தது. இதனால் என்னால் எங்க எங்கும் செல்ல முடியவில்லை என்று கூறினார்.
அனைத்து கோயில்களுக்கும் சென்று தரிசனம் செய்வது ஆசையாக தான் உள்ளது என்று தன் மகனிடம் கூறியுள்ளார். இதையடுத்து தனது தாயின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என எண்ணி தனது வேலையை ராஜினாமா செய்துள்ளார்.
அதன் பின்பு மைசூரில் இருந்து காசி வரை சென்று, செல்லும் வழியில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் உள்ள கோவில்களுக்கு சென்று 61,198 கி.மீ தூரம்கடந்து தற்போது ராமேஸ்வரம் வந்து அனைத்து சுற்றுலாத்தலங்களையும் பார்த்து கொண்டு பின்பு தமிழகத்தில் உள்ள அனைத்து கோவிலும் சென்று மைசூருக்கு செல்ல உள்ளோம் என்று கூறினார். காரில் ஏன் பயணம் செய்யவில்லை என்ற கேள்விக்கு தந்தையின் நினைவாக இந்த இரு சக்கர வாகனத்தை பயன்படுத்துவதாக கூறினார்.
நம்மை பெற்ற தாயும், தகப்பனும் நம்முன் வாழும் தெய்வம்.அவர்கள் வாழும் போது நன்றாக பாதுகாப்புடன் பாதுகாத்து வாழவேண்டும்.இறந்த பிறகு போட்டோக்கு மாலை போட்டு கும்பிடுவதில் ஒரு புரோஜனமும் இல்லை. பெற்றவர்களை வயதான பிறகு நாம்தான் பாதுகாக்க வேண்டும் என்று இளைஞர்களுக்கு அறிவுரை கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Ramanathapuram