ஹோம் /ராமநாதபுரம் /

10 நாட்களில் திருமணம்: சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்- ராமநாதபுரத்தில் சோகம்

10 நாட்களில் திருமணம்: சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்- ராமநாதபுரத்தில் சோகம்

X
பரமகுடி

பரமகுடி மருத்துவமனை

Ramanathapuram accident | பரமக்குடி அருகே திருமணத்துக்கு 10 நாட்கள் முன்னதாக மாப்பிள்ளை சாலை விபத்தில் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Paramakudi, India

பரமக்குடி அருகே நயினார்கோவில் பகுதியில்ஜேசிபி வாகனத்தில் மோதி இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே அண்டக்குடி புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அலெக்சாண்டர். அவருக்கு வயது 26. இவர் நயினார்கோவிலிருந்து சொந்த ஊருக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த ஜேசிபி வாகனத்தில் நிலைதடுமாறி மோதியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

விபத்து ஏற்பட்ட இடம்

இந்நிலையில், உடனடியாக அப்பகுதி மக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி அலெக்ஸாண்டர் பரிதாபமாக உயிரிழந்தார்.

95 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்.. பரமகுடியில் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் வழங்கினார்..

அலெக்சாண்டருக்கு வரும் 23-ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. சாலை விபத்தில் புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் அண்டக்குடி புதூர் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விபத்து குறித்து நயினார்கோவில் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

செய்தியாளர்: மனோஜ், ராமநாதபுரம்.

First published:

Tags: Local News, Ramanathapuram