ஹோம் /ராமநாதபுரம் /

ராமநாதபுரத்தில் வலையில் சிக்கிய 3 டன் எடையுள்ள திமிங்கலம்- மீண்டும் கடலில் விட்ட மீனவர்கள்

ராமநாதபுரத்தில் வலையில் சிக்கிய 3 டன் எடையுள்ள திமிங்கலம்- மீண்டும் கடலில் விட்ட மீனவர்கள்

திமிங்கலம்

திமிங்கலம்

Ramanathapuram | ராமநாதபுரம் அடுத்த தேவிபட்டினத்தில் வலையில் சிக்கிய 3 டன் திமிங்கலத்தை மீண்டும் கடலில் சென்று மீனவர்கள் விட்டனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Devipattinam, India

ராமநாதபுரம் அடுத்த தேவிபட்டினம் அருகே உள்ள அழகன்குளம் பகுதியில் உள்ள அம்மன் குடியிருப்பு கடற்கரைப் பகுதியில் மீனவர்கள் கரைவலை மீன்பிடிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது மீனவர்கள் வலையில் ராட்சத புள்ளி திமிங்கலம் சிக்கியுள்ளது. இதனை பத்திரமாக மீண்டும் கடலில் விட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி, முகுந்திராய சத்திரம், குந்துகால், பனைக்குளம், ஆற்றங்கரை, அழகன் குளம், சீனியப்ப தர்கா, வேதாளை, உச்சிப்புளி, சித்தார்கோட்டை, கீழக்கரை, ஏர்வாடி உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் மீனவர்கள் பாரம்பரிய முறையான கரைவலை மீன்பிடிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

திமிங்கலத்தை கடலில் விடும் மீனவர்கள்

மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடல் பகுதியில் திமிங்கலம், கடல் பசு, டால்பின், ஆமைகள், சுறா, கடல் குதிரை, போன்ற அரியவகை கடல் வாழ் உயிரினங்கள் வாழ்கின்றன. இவை கடலில் ஏற்படும் காலநிலை மாற்றம் மற்றும் விபத்துகள், இறந்து கரை ஒதுங்குவது அல்லது மீனவர்கள் வலையில் சிக்குவது என தொடர்ந்து நடைபெறுவது வழக்கமாக உள்ளது.

இந்நிலையில், வழக்கம் போல் அழகன்குளம் அம்மன் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் ஆற்றங்கரை கடற்கரை பகுதியில் 30க்கும் மேற்பட்ட மீனவர்கள் கரைவலை மீன்பிடிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது மீனவர்கள் வலையில் அதிக எடை கொண்ட மிகப்பெரிய புள்ளி திமிங்கலம் ஒன்று வலையில் சிக்கியது.

இதனை பார்த்த மீனவர்கள் உடனடியாக அந்த புள்ளி திமிங்கல மீனை வலையில் இருந்து மீட்டு மீண்டும் பத்திரமாக கடலில் விட்டனர். மீனவர்கள் வலையில் சிக்கிய மீன் சுமார் 18 அடி நீளமும் 3 டன் எடை இருக்கும் என கரைவலை மீன்பிடிப்பில் ஈடுபட்ட மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

திமிங்கலத்தை மீனவர்கள் மீண்டும் கடலில் விட்டதை அங்கிருந்த மீனவர் ஒருவர் அவரது தொலைபேசியில் வீடியோ எடுத்து தற்போது சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். மீனவர்கள் கடலில் பத்திரமாக விட்டதால் வனத்துறையினர் மீனவர்களை பாராட்டினர்.

Published by:Karthick S
First published:

Tags: Local News, Ramanathapuram