Home /ramanathapuram /

ராமநாதபுரத்தில் ஆகஸ்ட் 6-ம் தேதி மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் - விவரங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்

ராமநாதபுரத்தில் ஆகஸ்ட் 6-ம் தேதி மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் - விவரங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

வரும் 6ம் தேதி மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் ராமநாதபுரம் சக்கரக்கோட்டை மேற்பார்வை பொறியாளர் அலுவலக வளாகத்தில்  காலை 10 மணிக்கு நடப்பதாக மின்சார வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    ராமநாதபுரத்தில் வரும் 6ம் தேதி மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் ராமநாதபுரம் சக்கரக்கோட்டை மேற்பார்வை பொறியாளர் அலுவலக வளாகத்தில் காலை 10 மணிக்கு நடப்பதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில், ஜூலை மாதத்துக்கான மின் நுகர்வோர் கூட்டம் கடந்த 26ம் தேதி நடப்பதாக இருந்தது. பா.ஜ.க சார்பில் மின் வெட்டை கண்டித்து, ஆர்பாட்டம் நடந்தது. இதையடுத்து கூட்டம் தள்ளி வைக்கப்பட்டது.

    இதையடுத்து, மின் நுகர்வோர் கூட்டம் ஆகஸ்ட் 6ம் தேதி நடைவெறுவதாக மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    வரும் சனியன்று ராமநாதபுரம் சக்கரக்கோட்டையில் உள்ள மேற்பாா்வை பொறியாளா் அலுவலக வளாகத்தில் காலை 10 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    கூட்டத்தில், பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கையை மனுவாக அளித்து நிவாரணம் பெறலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    கூட்டம் குறித்த விவரங்களுக்கு, 04567-230577 மற்றும் 04567-231506 ஆகிய எண்களில் தொடா்பு கொண்டு விவரங்களைப் பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Ramanathapuram

    அடுத்த செய்தி