ஹோம் /ராமநாதபுரம் /

சடலமாக கண்டெடுக்கப்பட்ட பள்ளி மாணவி.. ராமநாதபுரத்தில் அதிர்ச்சி!

சடலமாக கண்டெடுக்கப்பட்ட பள்ளி மாணவி.. ராமநாதபுரத்தில் அதிர்ச்சி!

X
பள்ளிக்கு

பள்ளிக்கு சென்ற மாணவி ரயிலில் அடிப்பட்டு இறந்த நிலையில் கண்டெடுப்பு 

Ramanathapuram | பள்ளி சென்ற மாணவி வீடு திரும்பவில்லை என தேடி வந்த பெற்றோருக்கு காத்திருந்தது அதிர்ச்சி.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram | Ramanathapuram

ராமநாதபுரத்தில் நேற்று பள்ளிக்குச் சென்று வீடு திரும்பாத மாணவி இன்று ரயிலில் அடிப்பட்டு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

ராமநாதபுரத்தில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் ரயில் வழித்தடத்தில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த நிலையில் சடலம் ஒன்று கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்நிலையில், சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில், அவர் ராமநாதபுரம் தனியார் மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவி என்பது தெரியவந்தது.

மேலும், நேற்று பள்ளிக்கு சென்ற அவர் வீடு திரும்பவில்லை என பெற்றோர்கள் புகார் அளித்திருப்பதும் தெரியவந்தது. தொடர்ந்து சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுப்பிய போலீசார், கொலையா, தற்கொலையா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர்: மனோஜ்குமார், ராமநாதபுரம்.

First published:

Tags: Death, Local News, Ramanathapuram