ஹோம் /ராமநாதபுரம் /

நங்கூரம் அறுந்து கரை ஒதுங்கிய நாட்டுப்படகு.. சூறைகாற்றால் சேதம்..! 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்பு..!

நங்கூரம் அறுந்து கரை ஒதுங்கிய நாட்டுப்படகு.. சூறைகாற்றால் சேதம்..! 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்பு..!

நாட்டுப்படகு

நாட்டுப்படகு

தரை தட்டிய நாட்டுப்படகை மீனவர்கள் சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்டனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram | Ramanathapuram | Tamil Nadu

பாம்பன் பகுதியில் நேற்று நள்ளிரவு வீசிய சூறைக்காற்றால் வடக்கு மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நாட்டுப்படகு காற்றின் வேகம் காரணமாக நங்கூரம் அறுந்து கரை ஒதுங்கியது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு சுமார் 7 மணி முதல் தொடர்ந்து சூறைக்காற்று வீசியது.இதனால் ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகம் மற்றும் பாம்பன் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகளை மீனவர்கள் கடலில் பாதுகாப்பான இடங்களில் நிறுத்தினர்.

இந்நிலையில் பாம்பன் வடக்கு மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாம்பனை சேர்ந்த மாரி என்பவருக்கு சொந்தமான நாட்டுப்படகு வீசிய சூறைக்காற்றில் நங்கூரம் அறுந்து கரை ஒதுங்கி தரை தட்டியதையடுத்து நாட்டுபடகு சேதமடைந்தது.

ALSO READ | ராமநாதபுரம் மாவட்டத்தில் வீர, தீர செயல்கள் புரிந்த சிறுமிகள் தமிழக அரசு விருதுக்கு விண்ணப்பிக்கலாம்..!

இந்நிலையில், தரை தட்டிய நாட்டுப்படகை மீனவர்கள் சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் மீட்டு மீண்டும் கடலுக்குள் கொண்டு சென்று நங்கூரமிட்டு நிறுத்தினர். நடுக்கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நாட்டுப்படகு நள்ளிரவு வீசிய சூறைக்காற்றால் கரை ஒதுங்கி சேதமடைந்தது மீனவர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியது.

இயற்கை பேரிடர் காலங்களில் தங்களது படகுகளை பாதுகாப்பாக நிறுத்துவதற்கு பாம்பன் வடக்கு மீன்பிடி துறைமுக பகுதியில் தூண்டில் வளைவுடன் கூடிய துறைமுகம் அமைத்து தர வேண்டும் என நாட்டுப்படகு மீனவர்களும், விசைப்படகு மீனவர்களும் அரசுக்கு கோரிக்கைகளை வைக்கின்றனர்.

Published by:Anupriyam K
First published:

Tags: Boats, Fisher man, Ramanathapuram, Ramnad